பத்மாவதி படத்தில் நடித்த தீபிகாவுக்கு இவ்ளோ கோடி சம்பளமா ! வாய்ப்பிளக்கும் தமிழ் நடிகைகள் !

0
1066
deepika-padukone

பாலிவுட் திரையுலகில் நெ.1 நாயகியாக வலம் வருபவர் தீபிகா படுகோன். அவர் நடித்து வெளியான படம் பத்மாவதி. இந்த படத்தின் சூட்டிங் துவங்கும் முன்னர் இருந்து தற்போது வரை பிரச்சனை மேல் பிரச்சனையாக இருந்து வருகிறது. இதனால் பல இடங்களில் வன்முறையும் வெடித்தது.

padmavathi

மேலும், படத்தின் நாயகி தீபிகா படுகோனிற்கு பல அமைப்புகள் கொலை மிரட்டல் விதித்தது. ராஜ்புட் கர்னி சேனா அமைப்பினர் தீபிகாவின் தலைக்கு 10 கோடி விலையும் வைத்தனர். அதனை தாண்டி பா.ஜ.க ஆளும் சில மாநிலங்களில் படத்தை வெளியிட தடையும் செய்யப்பட்டது.

இந்த தடைகளை எல்லாம் தாண்டி வெற்றி பெற்ற தீபிகா படுகோன் தற்போது தனது சம்பளத்தை 10 கோடியில் இருந்து 12 கோடியாக உயர்த்தியுள்ளார். மேலும், இந்த பிரச்சனையால் கடந்த பல மாதங்கள் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் குறிப்பிட்டுள்ளார் தீபிகா. இவருக்கு அடுத்து பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. அவர் தற்போது 11 கோடி சம்பளம் வாங்கி வருகிறார்.