கொரோனாவால் முடங்கிய சீரியல்கள் – கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள தெய்வமகள் சீரியல் நடிகை.

0
3242
suchitra
- Advertisement -

உலகமே கொரோனாவின் சீற்றத்தால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து விதமான படப்பிடிப்புகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் திரைத்துறையினர் வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் சினிமா துறையினர் பலரும் வேறு தொழில்களுக்கு மாறி வருகிறார்கள்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் கொரோனா சமயத்தில் வேலை இல்லாமல் பணக்கஷ்டம் ஏற்பட்டு நடிகை ஒருவர் கொள்ளையடிக்கும் நிலைக்கு சென்று உள்ளார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் தொடரில் பிரகாஷின் இரண்டாவது அண்ணியாக நடித்தவர் நடிகை சுசித்ரா. மேலும், இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரண்மனைக்கிளி தொடரிலும் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

நடிகை சுசித்ரா கார் ஓட்டுநரான மணிகண்டன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சுசித்ராவிற்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. கார் ஓட்டுநரான மணிகண்டனுக்கும் வருடங்கள் வருமானம் இல்லாமல் இருந்துள்ளது. அதேபோல படப்பிடிப்புகள் ஏதும் இல்லாத சூழலில் திருவிழாவிற்கும் வருமானம் இல்லாமல் போனது. இருவரும் சென்னையில் வசித்து வந்து உள்ளனர். இப்படி ஒரு நிலையில் மணிகண்டனின் தந்தை தந்தை வீட்டில் உள்ள பணம் மற்றும் நகையை திருடி வரச்சொல்லி மணிகண்டனிடமே கூறியுள்ளார் சுசித்ரா.

மனைவி சொன்ன பேச்சை கேட்டு கடலூரில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு கொள்ளையடிக்க சென்றுள்ளார் மணிகண்டன். பின்னர் அங்கே இருந்த 18 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுள்ளார். திருட்டு சம்பவத்தை தெரிந்துகொண்ட மணிகண்டனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுக்க மணிகண்டனை போலீசார் கைது செய்துள்ளார்கள். மேலும் தலைமறைவாக உள்ள சித்ராவையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

-விளம்பரம்-

Advertisement