என்னோட வலி அவருக்கு இருக்கா? அவர் அந்த பிரச்சனைக்கு வீதியில் நின்னாரா ? – ராஜ்கிரணுக்கு சீமான் பதிலடி

0
1811
- Advertisement -

யுவன், ஏ.ஆர்.ரகுமான், இளையராஜா எல்லாம் சிறுபான்மையா? என்று சீமான் ஆவேசமாக அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் சீமான். இவர் நடிப்பை தாண்டி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் ஆவார். இவர் சமூகம் சார்ந்த பல பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

அந்த வகையில் சமீபத்தில் நடந்த மணிப்பூர் வன்முறை சம்பவங்களை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீமான் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாம் பேசுகிறோம். இதில் நமக்கு ஒரு லாபமும் இல்லை. மேலும், மணிப்பூரிலிருந்து யாரும் வந்து நமக்கு ஓட்டு போடப்போவதில்லை. கிறிஸ்தவர்களும் ஓட்டு போடப் போவதில்லை. கிறிஸ்துவத்தையும், இஸ்லாமியத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

- Advertisement -

சீமான் அளித்த பேட்டி:

ஆனால், அது சாத்தானின் பிள்ளைகளாக மாறி பல ஆண்டுகளாகி விட்டது. இந்த நாட்டில் நடந்த அநீதி, அக்கிரமத்திற்கு பெரிய பொறுப்பேற்க வேண்டியது இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்கள் தான் என்று வன்மையாக பேசி இருந்தார். இப்படி இவர் பேசியிருந்தது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை கிளப்பியிருந்தது. இது குறித்து நடிகர் ராஜ்கிரண் அவர்கள் பதிவு ஒன்று போட்டு இருந்தார். அதில் அவர், இஸ்லாமிய மக்களின் மாபெரும் தலைவர் நபிகள் நாயகம்.

ராஜ்கிரண் பதிவிட்ட கருத்து:

அவர்களின் வாழ்க்கையையும், வார்த்தைகளையும் பின்பற்றுவதால் பொறுமையை விட சிறந்த பொக்கிஷம் இல்லை என்று பொறுமையாக நான் இருக்கிறேன். இந்த பொறுமையை தவறாக புரிந்து கொண்ட கழிசடைகள் எல்லாம் பேச ஆரம்பித்தால் அதன் விளைவு மோசமாக இருக்கும் என்று கூறி இருந்தார். இதை பார்த்த சீமான் செய்தியாளர்களிடம், சிஐஏ போராட்டத்திற்கு என் உடன் வந்தாரா? முத்தலாக் தடை சட்டத்திற்கு வீதியில் நின்றாரா? அவர் வயதில் பெரியவர். நான் மதத்தை பற்றி பேசி இருப்பதாக அவர் நினைக்கிறார். ஆனால் உண்மையில் நான் மதத்தை பற்றி என்ன பேசினேன் என்று அவர் முழுமையாக கேட்கவில்லை.

-விளம்பரம்-

யுவன்,ரகுமான் குறித்து சொன்னது:

அவர், என்னை திட்டுவதற்கு முன் முழுமையாக தெரிந்துகொண்டு பேச வேண்டும். அதேபோல் மதத்தின் அடிப்படையில் மனிதனுடைய எண்ணிக்கையை கணக்கிடுவது தவறான ஒன்று. மதம் என்பது மாற்றிக் கொள்ளக் கூடியது. ஆனால், மொழி, இனம் மாற்றிக் கொள்ள முடியாது. நேற்று என்னுடைய தம்பி யுவன் சங்கர் ராஜா யாரு? இன்றைக்கு யாரு? நேற்று என் அன்பு சகோதர் ஏ.ஆர். ரகுமான் யாரு? திலீப். ஆனால், இன்றைக்கு அவர் ஏ.ஆர். ரகுமான்.

மதம் குறித்து சொன்னது:

அதனால் நேற்று பெரும்பான்மை. இன்றைக்கு சிறுபான்மையா? இதெல்லாம் கேவலமா இல்லையா? என்னுடைய இளையராஜா பெரும்பான்மை. யுவன் சங்கர் ராஜா சிறுபான்மையா? இது மாதிரி உலக பைத்தியக்காரத்தனம் எங்காவது இருக்கா? என்னுடைய கட்சியில் சிறுபான்மை பிரிவு என்பதே கிடையாது. மேலும் , என் கட்சியில் தெலுங்கர்கள், கன்னடர்கள், தமிழர்கள், மலையாளிகள் என எல்லா மொழி பிரிவின மக்களும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

Advertisement