‘யார் மேல அன்பு ஜாஸ்தியா வக்கிறேனோ அவங்கலாம் என் நெஞ்சில எட்டி உதைக்கிறாங்கமா’ – வைரலாகும் ரஜினியின் எமோஷனல் வீடியோக்கள்.

0
700
rajini
- Advertisement -

தமிழ் சினிமாவில் சமீப காலமாகவே பிரபலங்களின் விவாகரத்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடிகை சமந்தா விவகாரத்தை அறிவித்து இருந்தது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சமந்தாவை தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷ் விவாகரத்தை அறிவித்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் தனுஷ். தனுஷ் அவர்கள் சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார்.

-விளம்பரம்-

தனுஷ் – ஐஸ்வர்யா திருமணம் :

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தற்போது பாலிவுட், ஹாலிவுட் படங்கள் வரை தனது கால்த்தடத்தை பதித்து இருக்கிறார். நடிகர் தனுஷ் அவர்கள் 2004 ஆம் ஆண்டு ரஜினியின் முத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். மேலும், தனுஷின் மனைவியான ஐஸ்வர்யா பரத நாட்டியத்தில் சிறந்து விளங்கி வருகிறார். இவர் 3 ,வை ராஜா வை, சினிமா வீரன் என்று மூன்று படங்களை இயக்கியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் 2003 ஆம் ஆண்டு வெளியான விசில் படத்தில் நட்பே நட்பே என்ற பாடலை பாடியிருக்கிறார்.

- Advertisement -

விவாகரத்தை அறிவித்த தனுஷ் :

தனுஷுக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள். மூத்த மகன் யாத்ரா , இளையமகன் லிங்கா ஆவார். இப்படி ஒரு நிலையில் தாங்கள் பிரிவதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் தங்கள் சமூக வலைதளபக்கத்தில் அறிவித்து இருப்பது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது. இதுகுறித்து தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ’18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.

ரசிகர்களுக்கு வேண்டுகோள் :

இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஒரு கட்டத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் இருவரும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஓம் நமச்சிவாயா, அன்பை பகிருங்கள்” என்று தெரிவித்துள்ளனர்.

-விளம்பரம்-

ரஜினி படும் சோதனைகள் :

தனுஷின் இந்த முடிவை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் பல விதமான கருத்துக்களை போட்டு வருகின்றனர். பிரிவதற்கு முன்பாக இரண்டு மகன்களை பற்றி யோசித்து இருக்கலாமே என்று வேதனை தெரிவித்து வருகின்றனர். அதே போல ரஜினி ரசிகர்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவின் முதல் திருமணம் விவகாரத்து ஆனது.

ஆறுதல் கூறும் ரசிகர்கள் :

அவருக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இப்படி ஒரு நிலையில் தனது முதல் மகளும் விவாகரத்து செய்து இருக்கிறார். இப்படி இரண்டு மகள்களால் ரஜினி மிகுவும் நொந்து போய்யுள்ள ரஜினிக்கு ரசிகர்கள் பலர் Stay Strong Thalaiva என்று ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும், ரஜினி கடந்த சில வருடங்களாக பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.

வைரலாகும் ரஜினி பட வசனங்கள் :

முதலில் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என்று பலர் அவரை விமர்சனம் செய்தனர். பின்னர் அடிக்கடி உடல் நல குறைபாடுகள் ஏற்பட்டு வருகிறது. அதே போல ரஜினியின் படங்கள் சமீப காலமாக தோல்வி என்று ரஜினி பல வலிகளை சந்தித்து வரும் நிலையில் தற்போது மூத்த மகளின் விவாகரத்து. இதனால் நேற்று முதல் Thalaivar Thalaiva போன்ற ஹேஷ் டேக்குகளை பகிர்ந்து வருகின்றனர். அதே போல ரஜினி தனது படங்களில் சொன்ன வேதனையான வசனங்களின் வீடியோக்களையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement