உள்ளே அவ்ளோ சண்டை போட்டாலும் வெளியில் வந்ததும் நிரூப் – பிரியங்கா என்ன சொய்துள்லார்கள் பாருங்க. வைரல் புகைப்படம்.

0
532
niroop
- Advertisement -

உலகம் முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் பேராதரவைப் பெற்று வரும் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி ஞாயிற்று கிழமை தான் கோலாகலமாக முடிவடைந்தது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிகழ்ச்சியை கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. வழக்கம் போல் இல்லாமல் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல மாற்றங்களை கொண்டு வந்திருந்தார்கள். நிகழ்ச்சி ஆரம்பத்திலேயே 18 போட்டியாளர்களை களம் இறக்கி இருந்தார்கள்.

-விளம்பரம்-

அதிலும் ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் தான் அதிகம் இருந்தார்கள். மேலும், பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே திருநங்கை நமிதா மாரிமுத்துக்கு வாய்ப்பு கொடுத்து இருந்தார்கள். ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் நிகழ்ச்சியை விட்டு ஓரிரு நாட்களிலேயே வெளியேறிவிட்டார். பிக் பாஸ் சீசன் 5 இறுதி போட்டியாளர்களாக பவானி, பிரியங்கா, ராஜு, நிரூப், அமீர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பின் கிராண்ட் பினாலே ஞாயிறு கிழமை ப்ரம்மாண்டமாக நடந்தது.

இதையும் பாருங்க : தனுஷ்ஷின் விவாகரத்து – பழசை எல்லாம் கிளறி ரசிகர்கள் சொல்லும் காரணங்கள். என்னென்ன பாருங்க.

- Advertisement -

பிக் பாஸ் வின்னர்:

இதில் ராஜு டைட்டில் வின்னர் ஆனார். பிரியங்கா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். மூன்றாம் இடத்தை பவானி ரெட்டியும், நான்காம் இடத்தை அமீர் பிடித்து உள்ளார்கள். இது ஒரு பக்கம் இருக்க வழக்கம்போல பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் அன்பு மழை பொழிந்தாலும் போகப்போக போட்டியாளர்களுக்குள் போட்டியும் சச்சரவும் சலசலப்பும் தொடங்கியது. இதில் இந்த முறை அதிக பிரச்சனையில் சிக்கியது பிரியங்கா தான். ஒருவரை விடாமல் அனைவரிடமும் சண்டைப் போட்டு இருந்தார்.

பிக் பாஸ் வீட்டில் பிரியங்கா:

இதனால் இவரை பற்றி சோசியல் மீடியாவில் பல மீம்ஸ்களும் கிண்டல், கேலியும் வந்திருந்தது. அதோடு பிக்பாஸ் வீட்டில் நுழைந்த ஆரம்பத்திலேயே பிரியங்கா-நிரூப் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தது அனைவருக்கும் தெரிந்ததே. பின் நாட்கள் செல்லச் செல்ல இருவரும் ஒருத்தரை ஒருத்தர் தாக்கி பேசிக்கொண்டு சண்டை போட்டு இருந்தார்கள். இது பலருக்கு அதிர்ச்சியாக இருந்தது. பிக்பாஸ் இறுதிகட்டத்தை நெருங்கும் போது இந்த விளையாட்டிற்கு தகுதி இல்லாதவன் என்று பிரியங்கா சொல்ல, நீ என்ன தகுதியோடு இருக்கிறாய் என்று நிரூப் கேட்க அப்படியே இரண்டு பேரும் பயங்கரமாக சண்டை போட்டு இருந்தார்கள்.

-விளம்பரம்-

பிரியங்கா-நிரூப் சண்டை:

அதுமட்டும் இல்லாமல் அந்த இரண்டு வாரமும் இவர்களுடைய சண்டையே பிக்பாஸ் வீட்டில் பெரும் கலவரமாக இருந்தது. இப்படி குழாயடி சண்டை போட்ட பிரியங்கா-நிரூப் பற்றி சோசியல் மீடியாவில் பல கருத்துக்கள் வந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்தவுடன் இவர்களுடைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. உள்ளே அவ்வளவு சண்டை போட்டாலும் வெளியே வந்ததும் பிரியங்கா-நிரூப் என்ன செய்திருக்கிறார் பாருங்க. நிகழ்ச்சி முடிந்த அடுத்த நாளே இவர்கள் இருவரும் சேர்ந்து வெளியில் சென்றிருக்கிறார்கள்.

விமர்சித்தவர்க்கு பிரியங்கா கொடுத்த பதில் போட்டி:

என்னவோ சண்டையே நடக்காத மாதிரி அவ்வளவு சந்தோஷமாக ஹோட்டல், பார்க் என்று சுற்றி திரிந்து புகைப்படங்களை எடுத்து பதிவிட்டுகிறார்கள். இதற்கு ரசிகர்கள் பலரும் விமர்சித்ததற்கு பிரியங்கா பதில் கொடுத்து இருக்கிறார். இவரின் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், பிக் பாஸ் 5ன் போது விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதை மா கா பா மற்றும் மைனா நந்தினி தான் தொகுத்து வழங்கி வருகிறார்கள். இந்த நிலையில் மீண்டும் பிரியங்கா விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement