6 ஆஸ்கர் வாங்கிருக்கு அது Overrated ah? கேலிக்கு உள்ளான தனுஷ்ஷின் பேச்சி – வைரலாகும் வீடியோ இதோ.

0
687
dhanush
- Advertisement -

இந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தனுஷ். தமிழில் பல படங்களில் தன்னுடைய அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருக்கிறது. தமிழ் நடிகர்களில் சில நடிகர்களுக்கு மட்டுமே பாலிவுட்டில் அருமையான வாய்ப்பு கிடைக்கும். அதில் ரஜினி, நெப்போலியன் என்று ஒரு சிலர் மட்டும் தான் கால்தடம் பதித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

பாலிவுட்டிலும் கலக்கும் தனுஷ் :

அந்த வகையில் இளைய தலைமுறை நடிகர், நடிகைகளில் யாரும் ஹாலிவுட் படத்தில் நடித்தது இல்லை. அந்த குறையைத் தீர்த்து வைத்திருக்கிறார் தனுஷ். இவர் கோலிவுட்டில் மட்டுமில்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என பல மொழிகளில் அசத்தி வருகிறார். மேலும், ராஞ்சனா என்ற படத்தின் மூலம் தான் தனுஷ் பாலிவுட்டில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஷமிதாப் படத்தில் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து தனுஷ் நடித்திருந்தார்.

- Advertisement -

தனுஷ் அக்ஷய்யின் அட்ரங்கி ரே :

அதன் பின் The Extraordinary Journey of the Fakir என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டிலும் கலக்கி இருக்கிறார். இதைத் தொடர்ந்து தனுஷ் தற்போது மீண்டும் ஹிந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவாகியுள்ள அட்ரங்கி ரே படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தில் அக்ஷய்குமார், சாரா அலி கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும், இந்த படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நாளை வெளியாக இருக்கிறது.

காபி வித் கரன் நிகழ்ச்சியில் பங்கேற்ற தனுஷ் :

இந்த படத்தை தமிழில் டப் செய்து கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. அதோடு படத்தின் ப்ரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாலிவுட்டின் பிரபல உரையாடல் நிகழ்ச்சியில் ஒன்று காபி வித் கரன். இந்த நிகழ்ச்சியை இயக்குநர் கரன் ஜோஹர் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் தனுஷ், சாரா அலிகான் பங்கேற்று இருந்தார்கள். அப்போது தனுஷிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

பாராசைட் குறித்து தனுஷ் :

அதில், அனுராக் காஷ்யப், சஞ்சய் பன்சாலி, ஸோயா அக்தர், ராஜமவுளி, ஷங்கர் அல்லது நான் என இந்தியாவில் எந்த இயக்குநருடன் நீங்கள் அடுத்த படத்தில் பணியாற்ற விரும்புகிறீர்கள்? என்று கரன் ஜோகர் கேட்டிருந்தார். அதற்கு தனுஷ் ராஜமவுலி என்று பதிலளித்திருந்தார். பின் சமீபத்தில் வந்த படத்தில் ரொம்ப மிகைப்படுத்தப்பட்டதாக உங்களுக்கு தோன்றியது என கரண் கேட்டிருந்தார். அதற்கு தனுஷ் அவர்கள் கடந்த ஆண்டின் சிறந்த படம் உள்பட 6 பிரிவுகளில் ஆஸ்கர் விருது பெற்ற பாராசைட் படம் என்று கூறியிருந்தார்.

6 ஆஸ்கர் விருதை குவித்த படம் :

இந்த பதில் பாராசைட் படத்தில் ரசிகர்கள் மத்தியில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் இந்த படத்தின் ரசிகர்கள் கொந்தளித்து கமெண்ட் போட்டு வருகிறார்கள். மேலும், தனுஷ் தற்போது தெலுங்கு மொழியிலும் முதன்முதலாக நடிக்க இருக்கிறார். அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்படி இந்தியாவின் பல மொழி படங்களில் கால் தடம் பதித்து வரும் தனுஸுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement