இன்னும் 1 கோடி பரிசு என் கைக்கு வரல, கேட்டா இப்படி சொல்றாங்க – சர்வைவர் வெற்றியாளர் விஜி ஷாக்கிங் பேட்டி.

0
704
viji
- Advertisement -

இந்த ஆண்டு முதல் முறையாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிவடைந்தது. ஜான்சிபார் எனப்படும் டான்சானியா தீவு ஒன்றில் போட்டியாளர்கள் தங்கியிருக்க அங்கிருந்து ஒளிபரப்பிய நிகழ்ச்சி தான் சர்வைவர். இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கி இருந்தார். மேலும், முதலில் இந்த நிகழ்ச்சியில் 16 பேர்கள் கலந்து கொண்டு காடர்கள், வேடர்கள் என்று இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு பல சவால்கள் கொடுக்கப்பட்டது.

-விளம்பரம்-
Popular tamil actress wins the Survivor title - Tamil News - IndiaGlitz.com

சர்வைவர் பட்டத்தை வென்ற விஜி :

கடுமையான பல போட்டிகள், சவால்கள்என்று நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றது. பின் அனைவரும் எதிர்பார்த்த 90 நாட்கள் சர்வைவர் முடிவில் விஜயலட்சுமி டைட்டிலை பெற்றது மிக பெரிய சாதனை. இதற்காக இவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. அதற்கான வீடியோவும், புகைப்படமும் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. இதனை பார்த்த ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவரும் விஜயலட்சுமிக்கு வாழ்த்து மழை பொழிந்து இருந்தார்கள்.

- Advertisement -

1 கோடி பரிசில் புதிய வீடா :

மேலும், சர்வைவர் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை விஜயலட்சுமி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள புது வீட்டில் குடியேறினார். அதற்கான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார். இதற்கு பலரும் வாழ்த்து கூறி கமெண்ட் போட்டு இருந்தார்கள். இந்நிலையில் விஜயலட்சுமி அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர் கூறியது, நாங்கள் புது வீட்டில் குடியேறி இருக்கிறோம். இதற்கு பலரும் வீடு புதுசா! ஒரு கோடி ரூபாய் பரிசு கலக்குறீங்க என்றெல்லாம் கமென்ட் போட்டு இருந்தார்கள்.

பரிசு தொகை கைக்கு வரவில்லை :

அந்த பணம் இன்னும் என் கைக்கு வந்து சேரவே இல்லை. அந்த காசில் தான் வீடு வாங்கி இருக்கேன் என்று ஏதாவது கிளப்பி விடாதீர்கள். ஒரு கோடி ருபாய் பரிசு பணம் தன் கைக்கு வந்து சேர சில மாதங்கள் ஆகும். அவர்கள் ரூல்ஸ் படி டெலிகாஸ்ட் முடிந்து இரண்டு மாதங்கள் கழித்து தான் பணம் கொடுப்பார்கள் சர்வைவர் நிகழ்ச்சியில் எங்களுடன் அந்த தீவில் க்ரூவில் இருந்து சிலர் எங்களுடன் தொடர்பில் இருந்தார்கள். எங்களுக்கு ஏதாவது அவசர தேவை என்றால் அவர்கள் மூலம் தான் தொடர்பு கொள்வோம்.

-விளம்பரம்-

நானும் யாருக்கும் போன் செய்யவில்லை :

ஆனால், நான் யாரையும், யாரு மூலமாகவும் போன் செய்து பேசவில்லை. எங்க, எப்படி கேட்டாலும் இதை நான் அழுத்தி சொல்வேன். ஆனால், நிகழ்ச்சியில் சில போட்டியாளர்கள் மணிக்கணக்கில் அந்த க்ரூவ் உடன் பேசிக் கொண்டிருந்தார்கள். அதோடு விளையாடிக் கொண்டிருக்கும்போது நடுவில் என்னைப்பற்றி நெகட்டிவான கமாண்ட் வந்து கொண்டிருந்தது. இது சிலர் திட்டமிட்டு செய்த வேலை என்று தான் நான் சொல்வேன்.

Vijayalakshmi wins Survivor, pens a thank-you note to contestants and fans  - Television News

பணம் கொடுத்து பெயரை கெடுத்த போட்டியாளர்கள் :

ஒரு கட்டத்துக்குப் பிறகு என்னைப் பத்தி நிறைய நெகட்டிவ் கமெண்ட் வந்தது எனக்கு அதிர்ச்சியாகி விட்டது. சில போட்டியாளர்கள் பணம் கொடுத்து எனக்கு எதிராக இதை செய்ய வைத்தார்கள் என்று எனக்கு தெரிய வந்தது என்று கூறியிருக்கிறார். அந்த போட்டியாளர் யார்? யார் இவருக்கு எதிராக பண்ணது? என்பதை விஜயலட்சுமி கூறவில்லை. இதுகுறித்து தற்போது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும், இவர் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement