தனுஷ்ஷை சொந்தம் கொண்டாடிய மதுரை தம்பதி – ஆதாரங்களை கண்டு நீதிமன்றம் போட்ட உத்தரவு.

0
2045
dhanush
- Advertisement -

தங்கள் பிள்ளை என்று உரிமை கோரிய மதுரை தம்பி போட் வழக்கை விசாரிக்க வேறொரு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக தனுஷ் திகழ்ந்து கொண்டு வருகிறார். இவர் ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் பல வெற்றிப் படங்களை கொடுத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், தனுஷ் அவர்கள் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் சாதித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் ஹாலிவுட், பாலிவுட்டிலும் கால்த்தடத்தை பதித்து இருக்கிறார். இதனிடையே நடிகர் தனுஷ் அவர்கள் 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

தனுஷ் குறித்த தகவல்:

இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளார்கள். இப்படி ஒரு நிலையில் தாங்கள் பிரிவதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் சமூக வலைதளபக்கத்தில் அறிவித்து இருப்பது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் தனுஷ் தன்னுடைய மகன் என்று சொல்லி கதிரேசன் தம்பதியர் நீதிமன்றத்தை நாடி இருக்கும் தகவல் ஏற்கனவே அனைவரும் அறிந்த ஒன்று. அதாவது, மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் கதிரேசன். இவருடைய மனைவி மீனாட்சி. இந்த தம்பதியினரின் மூத்த மகன் கலையரசன். இவர் பிளஸ் 1 படிக்கும் போது காணாமல் போய்விட்டார்.

தனுஷ் மீதான வழக்கு:

இந்த நிலையில் சினிமாவில் நடித்து வரும் தனுசை பார்த்துவிட்டு தனது மகன் கலையரசன் தான் தனுஷ் என்றும் அவரை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள் கதிரேசன் தம்பதியினர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதுமட்டும் இல்லாமல் ஜீவானந்தம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்கள். பின் இந்த விசாரணையின் போலியான ஆவணங்களை தனுஷ் தாக்கல் செய்ததாக குற்றம் சாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர் கதிரேசன் தம்பதியினர்.

-விளம்பரம்-

கதிரேசன் தம்பதியினர் அளித்த புகார்:

இது தொடர்பாக உயர்நீதிமன்ற கிளையில் வழக்கும் தொடர்ந்திருந்தது. அதில் அவர்கள் கூறியிருப்பது, நடிகர் தனுஷ் என் மகன் என உரிமை கோரி வருகிறேன். இது தொடர்பான வழக்கில் நடிகர் தனுஷ் தரப்பில் நீதிமன்றத்தில் போலியான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் தனுஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு அந்த வழக்கில் என் புகாரை விசாரிக்க விசாரண நீதிமன்றத்திற்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், மதுரை ஆறாவது நீதித்துறை நடுவர் மன்றம் என் வழக்கை தள்ளுபடி செய்திருக்கிறார். ஆவணங்களின் அடிப்படையில் எனது வழக்கில் முகாந்திரம் இல்லை என நீதித்துறை நடுவர் முடிவு செய்திருக்கிறார்.

நீதிபதி போட்ட உத்தரவு:

மேலும், தனுஷ் தாக்கல் செய்த பிறப்பு சான்றிதழின் உண்மை தன்மையை ஆராய அந்த சான்றிதழ் மதுரை மாநகராட்சி அனுப்பப்பட்டது. அந்த முடிவு வருவதற்குள் என் மனுவை தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. எனவே தனுஷ் மீது போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாக வழக்கு பதிவு செய்ய கோரியும், நான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி பிறப்பித்த நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து என் மனுவை மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். ஆகவே, இந்த வழக்கை வேறு நீதிபதி அமர்வில் பட்டியலிட உத்தரவிட்டிருக்கிறார் நீதிபதி.

Advertisement