‘சொல்வதற்கே நடுக்கமாக உள்ளது’ – கூட்ட நெரிசலில் தகாத முறையில் நடந்த நபர். பளார்விட்ட நடிகை.

0
195
- Advertisement -

சினிமா ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது நடிகையிடம் நபர் ஒருவர் தகாத முறையில் நடந்திருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோட்டில் ஹைலைட் மாலில் நேற்று சினிமா ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகைகள் பலர் பங்கேற்று இருந்தார்கள். மலையாள நடிகைகள் சானியா ஐயப்பன், க்ரேஸ் ஆண்டனி ஆகிய இருவருமே இந்த நிகழ்ச்சியில் கலந்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

அப்போது கூட்ட நெரிசலில் நடிகைகளிடம் சிலர் மோசமாக நடந்து கொண்ட சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, சினிமா பட புரமோஷன் நிகழ்ச்சி முடிந்து மேடையில் இருந்து இரண்டு நடிகைகளுமே கீழே இறங்கி சென்றிருக்கிறார்கள். அப்போது நடிகைகளுடன் செல்பி எடுப்பதற்காக சிலர் அவர்களை நெருங்கி சென்றனர்.

- Advertisement -

ஆத்திரத்தில் நடிகை:

அந்த சமயத்தில் தான் ஒருவர் நடிகையின் மீது கை வைத்திருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த நடிகை அந்த நபரை தாக்கி இருக்கிறார். இதனை அடுத்து அந்த இடத்தில் பயங்கர சலசலப்பு ஏற்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். பின் தகவல் சோசியல் மீடியாவில் வைரலானது. இந்த சம்பவத்தால் கோழிக்கோடு ஹைலைட் மாலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டு இருந்தது.

நடிகை க்ரேஸ் ஆண்டனி பதிவிட்ட பதிவு:

இந்நிலையில் இது குறித்து நடிகை க்ரேஸ் ஆண்டனி தன்னுடைய சமூக வலைப்பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருந்தது, கோழிக்கோடு ஹைலைட் மாலில் நடந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு நான் சென்றிருந்தேன். அங்கு மிக மோசமான சம்பவம் ஒன்று நடந்தது. நான் மிகவும் விரும்பும் ஒரு இடம் கோழிக்கோடு. ஆனால், நிகழ்ச்சி முடிந்து வந்த என் உடலில் பலவந்தமாக அங்கிருந்த ஒருவர் கை வைத்தார்.

-விளம்பரம்-

கோழிக்கோட்டில் நடந்த சம்பவம்:

என்னிடம் தகாத முறையில் நடந்ததை பற்றி கூறுவதற்கு எனக்கு நடுக்கமாக இருக்கிறது. அவ்வளவு மோசமானவர்களாக நம்மை சுற்றி இருக்கிறார்கள். புரமோஷனுக்காக எங்கள் டீம் பல இடங்களுக்கும் போய் இருக்கிறது. வேறு எந்த ஒரு இடத்திலுமே இந்த மாதிரி ஒரு சம்பவத்தை நான் சந்தித்ததில்லை. என்னுடன் இருந்த சக நடிகைகளுக்கும் இதே பிரச்சனை ஏற்பட்டது. அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து பதிலடி கொடுத்தார்.

நடிகைக்கு ஆதரவு தெரிவித்த நெட்டிசன்கள்:

ஆனால், என்னால் அப்படி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு நிமிடம் நான் அதிர்ச்சியில் நின்று விட்டேன். அதே உணர்வற்ற நிலையில் இருந்து நான் கேட்கிறேன். தீர்ந்து விட்டதா? உங்களை பிடித்த அந்த நோய் என்று கூறியிருக்கிறார். இப்படி இவர் பதிவிட்ட பதிவு சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. இதில் பலரும் நடிகைக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

Advertisement