பல கெட்டப்பில் தனுஷ் மிரட்டும் வடசென்னை டீசர்.!

0
321
Vadachennai

வெற்றி இயக்குனர் வெற்றிமாறன் தனுஷை வைத்து பொல்லாதவன் போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர்கள் இருவரும் இணைந்து வட சென்னை என்ற படத்தை எடுத்துவருக்கின்றனர். தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் நடிகைகள் ஆண்ட்ரியா,ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர்களும் மற்றும் நடிகர்கள் கிஷோர் ,சமுத்ரகனி, கருணாஸ் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

நடிகர் தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்” தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் வட சென்னை மக்களின் 35 வருட வாழ்க்கை வரலாற்றை எடுக்கபட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .இந்த படத்தில் தனுஷ் கேரம் போர்டு விளையாட்டு வீரராக நடித்துள்ளார்.

இந்த படம் மூன்று பாகங்களாக வெளியாகும் என்றும் தற்போது முதல் பாகத்தின் படப்பிடிப்புகள்
நிறைவடைந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தனுஷின் 35 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (ஜூலை 28)இந்த படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. இதோ அந்த டீஸர்