தெலுங்கு திரையுலகில் 2016-ஆம் ஆண்டு வெளி வந்த படம் ‘அப்பட்லோ ஒக்கடுண்டேவாடு’. இந்த படத்தில் ஹீரோவாக ஸ்ரீ விஷ்ணு நடித்திருந்தார். இப்படத்தினை இயக்குநர் சாகர். கே. சந்திரா இயக்கியிருந்தார். இதில் ஸ்ரீ விஷ்ணுவிற்கு ஜோடியாக தன்யா ஹோப் டூயட் பாடி ஆடியிருந்தார். இது தான் ஹீரோயினாக தன்யா ஹோப் அறிமுகமான முதல் படமாம். இதனைத் தொடர்ந்து ‘நேனு சைலஜா’ என்ற தெலுங்கு படத்தில் இடம்பெற்ற ‘நைட் இஸ் ஸ்டில் யங்’ என்ற பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தார் நடிகை தன்யா ஹோப்.
இதன் பிறகு ‘படேல் S.I.R’ என்ற படத்தில் தன்யா ஹோப் நடித்தார். இந்த படம் நடிகை தன்யா ஹோப்பிற்கு ரொம்பவும் ஸ்பெஷல். ஏனெனில், இதில் தன்யா ஹோப் பவர்ஃபுல்லான போலீஸ் கதாபாத்திரத்தில் வலம் வந்திருந்தார். இதில் ஹீரோவாக பிரபல நடிகர் ஜெகபதி பாபு நடித்திருந்தார். இப்படத்தினை இயக்குநர் வாசு பரிமி இயக்கியிருந்தார்.
‘படேல் S.I.R’ படத்துக்கு பிறகு ‘பேப்பர் பாய்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்த நடிகை தன்யா ஹோப், தெலுங்கு திரையுலகுடன் தன் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்தார். ஆகையால், அடுத்ததாக கோலிவுட் பக்கம் கவனம் செலுத்த துவங்கினார். அப்போது அவருக்கு அமைந்த படம் தான் ‘தடம்’. இதில் அருண் விஜய் டபுள் ஆக்ஷனில் மிரட்டியிருந்தார். இந்த படத்தினை பிரபல இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியிருந்தார்.
இப்படத்திற்கு பிறகு தன்யா ஹோப்பிற்கு, தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலுமே வாய்ப்புகள் வரவில்லை. ஆகையால், டக்கென கன்னட திரையுலகில் நுழையலாம் என்று முடிவெடுத்தார் தன்யா ஹோப். கன்னடத்தில் தர்ஷன் நடித்த ‘யஜமானா’ என்ற படத்தில் அறிமுகமானார் தன்யா ஹோப். ‘யஜமானா’ படத்துக்கு பிறகு ‘உத்கர்ஷா, அமர், காகி’ என அடுத்தடுத்து மூன்று கன்னட படங்களில் நடித்தார். இந்நிலையில், நடிகை தன்யா ஹோப் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஹாட்டான தனது ஸ்டில்ஸை தொடர்ந்து ஷேர் செய்து வருகிறாராம்.
கடந்த மார்ச் மாதம் 13-ஆம் தேதி தன்யா ஹோப் ஹீரோயினாக நடித்த தமிழ் திரைப்படம் ‘தாராள பிரபு’ வெளி வந்தது. இதில் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடித்திருந்தார். தற்போது, ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருவதால், ‘144’ போடப்பட்டுள்ளது. ஆகையால், தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது. ‘கொரோனா’ பிரச்சனை முடிந்த பிறகு, மீண்டும் ‘தாராள பிரபு’ ரிலீஸ் செய்யப்படுமாம்.