சென்னை வந்த தோனி பீஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யுடன் சந்திப்பு – இதான் காரணம்.

0
2062
vijay
- Advertisement -

தமிழ் சினிமாவில் தளபதி என்று அழைக்கப்படும் விஜய்யை கிரிக்கெட்டில் தலை என்று அழைக்கப்படும் தோனி நேரில் சந்தித்து உரையாடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்தியாவில் துவங்கிய 14வது ஐபிஎல் தொடரானது வீரர்களுக்கு இடையே பரவிய கொரோனா தொற்று காரணமாக 21 போட்டிகள் முடிவடைந்த நிலையில் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீதமுள்ள 31 போட்டிகளில் எப்போது நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் நடைபெறும் என பிசிசிஐ ஏற்கனவே அறிவித்திருந்தது.

-விளம்பரம்-
vijay

அதற்கான அட்டவணையையும் சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி துபாயில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் போட்டியில் விளையாடும் என்று அறிவித்திருந்தது. இப்படி ஒரு நிலையில் Csk அணி வீரர்கள் பலரும் சென்னை வர துவங்கினர்.

இதையும் பாருங்க : 5 வருஷமா இதான் சொல்றாங்க, என்ன கைது பண்ண முடியாது, நான் ஜாலியா என் பாய் பிரண்டு கூட இருக்கேன் – மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ.

- Advertisement -

அந்த வகையில் சென்னை அணியில் முதல் நபராக தோனி கடந்த சில நாட்களுக்கு முன் தனது குடும்பத்துடன் சென்னை வந்து தரை இறங்கியுள்ளார். இப்படி ஒரு நிலையில் தோனி விஜய்யை பீஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்து அவருடன் கேரவனில் சிறிது நேரம் உரையாடி இருக்கிறார் அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Image

விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கோகுலம் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. இந்த ஸ்டூடியோ வளாகத்தினுள் அமைந்துள்ள மற்றொரு அரங்கில் தான் கேப்டன் தோனி நடிக்கும் விளம்பரப் படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதற்காக வருகை தந்த தோனியை நடிகர் விஜய் சந்தித்துப் பேசியுள்ளார். பல ஆண்டுகள் கழித்து தோனி மற்றும் விஜய் நேரில் சந்தித்து உள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement