5 வருஷமா இதான் சொல்றாங்க, என்ன கைது பண்ண முடியாது, நான் ஜாலியா என் பாய் பிரண்டு கூட இருக்கேன் – மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ.

0
41385
- Advertisement -

சமூக வலைதளத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய நபராக இருந்து வந்தவர் மாடலும் நடிகையுமான மீரா மிதுன். மாடல் அழகியான இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ விஜய் தொலைக்காட்சியில் சென்ற ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே இவர் அழகிப் போட்டி என்ற பெயரில் பல்வேறு நபர்களை ஏமாற்றியதாக ஜோ மைக்கல் என்பவர் குற்றம் சாட்டி இருந்தார். அது போக இவர் மீது ஒரு சிலர் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில்தான் பிக்பாஸில் கலந்து கொண்டார் மீராமிதுன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சை போட்டியாளராக திகழ்ந்து வந்த மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் தொடர்ந்து சர்ச்சையான விஷயங்களை செய்து வந்தார். அதிலும் கடந்த சில மாதங்களுக்கு முன் கோலிவுட் மாபியா என்ற பெயரில் சூர்யா மற்றும் விஜய் குறித்து அவதூறாக பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார் மீரா.

இதையும் பாருங்க : இதுக்கு நீங்க ஜெயிலுக்கு போனும் – தனது மகளின் புகைப்படத்தை பயன்படுத்தியதால் நகுல் மனைவி காட்டம்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் மீராமிதுன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் ஒரு புதிய சர்ச்சையை கிளப்பியிருந்தார். தீ தன்னுடைய முகத்தை காபி செய்கிறார் என்றும், தமிழ் சினிமாவில் எஸ்சி இனத்தை சார்ந்த இயக்குனர்கள் மற்றும் நடிகர்களை துரத்த வேண்டும் என்று மீரா மிதுன் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் எஸ் சி இனத்தில் இருப்பவர்கள் அனைவரும் தவறான வழியில் செல்வதால் தான் உங்களை எல்லாம் அப்படி பார்க்கிறார்கள் என்றும் மீராமிதுன் பேசி இருந்தார்.

இவரின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது மேலும் இவரை கைது செய்ய வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பலரும் கூறி வருகின்றனர். அதே போல மீரா மிதுன் மீது கலகத்தைத் தூண்டும் வகையில் பேசுதல், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இப்படி ஒரு நிலையில் மீரா மிதுன் மீண்டும் சில வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

அதில் தன்னை பயன்படுத்திக்கொண்ட குறிப்பிட்ட நபர் உங்களை பற்றி பேசியதை ஏதோ ஒட்டுமொத்த சமூகத்தை பற்றி பேசியதாக தவறான செய்திகளை பரப்புகிறார்கள். நான் ராயல் பேமிலியில் இருந்து வந்தவள். கடந்த ஐந்து ஆண்டுகளாக என்னை பற்றி இப்படித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், என்னை கைது செய்ய முடியவில்லை. என் மீது எந்த ஒரு வழக்கும் இல்லை, நான் இங்கு சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். என்னுடைய பாய் பிரண்ட்டின்ன் பிறந்த நாள் வரப்போகிறது. அதை நான் ஜாலியாக கொண்டாடப் போகிறேன் என்று சவால் விட்டிருக்கிறார் மீரா மிதுன்.

Advertisement