சூப்பர் ஸ்டார் பட்டத்தை விடுத்து தளபதி பட்டத்தை குறி வைக்கிறாரா விஜய்? சர்ச்சையான விஜய்யின் அப்பா சட்டை கதை.

0
401
- Advertisement -

பொதுவாக விஜய் படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பை விட அவரது படங்கலின் இசை வெளியீட்டு விழாவிற்க்கு தான் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அதிலும் இசை வெளியீட்டு விழாவில் அவர் கூறும் குட்டி ஸ்டோரி தான் இந்த விழாவில் ஹைலைட்டாக அமையும் அந்த வகையில் லியோ படத்தின் நான் ரெடி தான் பாடல் வெளியான போதே பெரும் சர்ச்சைகளை சந்தித்து இருந்ததால் லியோ படத்தின் இசை நிகழ்ச்சி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிகப்படியான பாஸ் கோரிக்கை காரணமாகவும் பாதுகாப்பை மனதில் கொண்டும் ரத்தாகி இருக்கிறது என்று படக்குழு அறிவித்து இருந்தது.

-விளம்பரம்-

இதனால் விஜய் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த படம் வெற்றி விழா நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. மேலும், இந்த விழாவில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இந்த விழாவில் பேசிய விஜய்’ ஒரு காட்டுக்கு ரெண்டு பேர் வேட்டைக்கு போறாங்க.அந்த காட்டுல காக்க கழுகு (என்று சொன்னதும் ஒரு நொடி சிரிப்பை அடக்க முடியாமல் மைக்கில் இருந்து கொஞ்சம் தள்ளி நின்றார்.

- Advertisement -

உடனே அரங்கத்தில் சில நொடிகள் கைதட்டலும், சத்தமும் கிழிந்தது ) காட்டுன்னா இதெல்லாம் இருக்கும் தான அதுக்கு சொன்னேன் பா!. அது மாதிரி இந்தக் காட்டுக்கு வேட்டைக்கு போறாங்க. ஒருத்தர் வில் அம்பு. இன்னொரு நபர் ஈட்டி, வேல் வச்சுருக்கிறவர் முயலை குறி வைக்கிறார். இன்னொருத்தர் யானையைக் குறி வைக்கிறார். இதுல யார் மாஸ் தெரியுமா.. யானைக்கு குறி வச்சவர் தான் மாஸ். கைக்குக் கிடைக்கிறது இல்லமா பெருசா குறி வச்சிருக்கார்ல. அது மாதிரித்தான் உயரிய விஷயங்களுக்கு ஆசைப்படணும்.

ஆசைகள் கனவுகள் இதுல என்ன தவறு’வீட்டுல குட்டி பையன் அப்பா ஓட சட்டையை போட்டுக்குவான். அப்பாவோட வாட்ச்ச கட்டிப்பான். அப்பாவோட சேர்ல உட்காந்து பார்ப்பான். அதுல என்ன தப்பு இருக்கு? ஆசைப்படுறதுலயும் கனவு காணுறதுலயும் எந்த தப்பும் இல்லை’ என்றும் பேசி இருந்தார். அதே போல சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பேசிய புரட்சி தலைவர் ஒருத்தர்தான், நடிகர் திலகம், புரட்சி கலைஞர் விஜய் காந்த்,உலக நாயகன் ஒருத்தர்தான், சூப்பர் ஸ்டார் ஒருத்தர்தான், தல ஒருத்தர்தான்…தளபதிக்கு அர்த்தம் தெரியுமா… நீங்க மன்னர்கள் நீங்க ஆணையிடுற விஷயங்களை நான் செய்யிற தளபதி என்றும் குறி இருந்தார்.

-விளம்பரம்-

இப்படி இவர் பேசி இருப்பது தற்போது சர்ச்சையாகி இருக்கிறது. என்னதான் சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் என்பது போல விஜய் பேசி இருந்தாலும் தளபதி என்பது நான் மட்டும் தான் என்பது போல தான் விஜய் பேசி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் நடிகர் விஐய், முதலமைச்சர் ஸ்டாலினின் தளபதி பட்டத்திற்கு கொக்கி போடுவதாக தற்போது சர்ச்சை எழுந்து இருக்கிறது. அதே போல இந்த விழாவில் குட்டி பையன் அப்பா ஓட சட்டையை போட்டுக்குவான்.

அப்பாவோட வாட்ச்ச கட்டிப்பான். அப்பாவோட சேர்ல உட்காந்து பார்ப்பான்’ என்று விஜய் பேசியது ஸ்டாலினை தான் குறிப்பிட்டு பேசி இருப்பதாக கூறி வருகின்றனர். ஏற்கனவே லியோ படத்திற்கு தி.மு.க வால் தான் பிரச்சனைகள் ஏற்பட்டது என்றும் அதனால் தான் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா கூட நடைபெறவில்லை என்றும் சர்ச்சை எழுந்தது. இதெற்கெல்லாம் தாண்டி இந்த விழாவில் தொகுப்பாளர்களான மிர்ச்சி விஜய்யும், டிடியும் விஜய்யிடம் ரேபிட் பையர் பாணியில் சில கேள்விகளை கேட்டனர்.

அதில் 2026 என கேட்ட கேள்விக்கு விஜய்,” 2026…2025க்கு அப்புறம் வர்ற வருஷம்.” என பதிலளித்தார். “வேற எதாவது சீரிஸாக கேட்கிறோம் ணே….” எனக் கேள்வியைத் தொடர்ந்தார். இதற்கு விஜய் ,” 2026ல ஃபுட்பால் வொர்ல்ட் கப் வருது, நீ வேணா செக் பண்ணி பாரு ப்ரோ.” எனக் கூற மேலும் கேள்வியை தொகுப்பாளர் மிர்ச்சி விஜய் தொடர்ந்தார். இறுதியாக ,” கப்பு முக்கியம் பிகிலு” என விஜய் கூற அரங்கமே கரகோஷத்தால் நிரம்பியது. இப்படி விஜய் தனது அரசியல் வருகையை உறுதி செய்து இருக்கும் நிலையில் தற்போது அரசியல் விமர்சங்களும் விஜய் மீது மீண்டும் கடுமையாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

Advertisement