புது முகங்கள் நடிப்பில் வெளியான டை நோ சரஸ் படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

0
1879
- Advertisement -

அறிமுக இயக்குனர் எம் ஆர் மாதவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் டை நோ சர்ஸ். இந்த படத்தில் உதய் கார்த்திக், ரிஷி, மாறா, சாய்பிரியா தேவா, மனோக்ஷா உட்பட பல புது முகங்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை ஸ்ரீநிவாஸ் சம்பந்தம் தயாரித்திருக்கிறார். போபோ சசி இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஜோன்ஸ்வி ஆனந்த் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். வடசென்னையில் உள்ள இரண்டு ரவுடிகளுக்கு இடையேயான சண்டையை மையமாக வைத்து இந்த இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் வடசென்னையை காண்பிக்கிறார்கள். இங்கு சாலையார் மற்றும் கிளியப்பன் என்று இரண்டு கும்பல் இருக்கிறது. இந்த கும்பலுக்கு இடையே எப்போதும் சண்டை முட்டிக் கொண்டிருக்கிறது. இப்படி ஒரு நிலையில் கிளியப்பன் மச்சானை சாலையார் தன்னுடைய அடியாட்களை வைத்து கொன்று விடுகிறார். இதனால் இரண்டு ரவுடி கும்பலுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. பின் ஒரு கட்டத்தில் இந்த பிரச்சனை சமரசத்திற்கு வந்து விடுகிறது.

- Advertisement -

அப்போது மச்சானை கொலை செய்த எட்டு பேரையும் சரணடைய சொல்கிறார் கிளியப்பன். இதில் ஒருவனுக்கு அப்போது தான் திருமணமாகி இருக்கிறது. இதனால் அவனுக்கு பதில் அவருடைய நண்பன் சிறைக்கு செல்கிறான். இதனால் சமாதானம் அடைந்த கிளியப்பன் வீட்டிற்கு பணம் வாங்க சாலையார் கும்பலிலிருந்து ஆட்கள் செல்கிறார்கள். அவர்களுடன் அந்த கொலையாளியும் செல்கிறான். அந்த கொலையாளியை பார்த்த கிளியப்பன் அதிர்ச்சி அடைகிறார்.

படத்தின் கதை:

இறுதியில் என்ன ஆனது? உண்மையில் கொலை செய்தவன் ஜெயிலுக்கு போனானா? இதனால் இருகும்பலுக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டதா? என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் உதய் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகனுக்கு சண்டை என்றாலே பிடிக்காது. ஆனால், அவர் சூழ்நிலை காரணமாக கத்தியை கையில் எடுக்கிறார். அதை அவர் எப்படி சாமர்த்தியமாக கையாண்டு பழி வாங்கினார்
என்பதை சிறப்பாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் .

-விளம்பரம்-

படம் குறித்த தகவல்:

குறிப்பாக, வடசென்னை இளைஞனாக அவர் தன்னுடைய சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். இவரை அடுத்து படத்தில் வரும் நடிகர்கள் பல பேர் புது முகங்களாகவே இருக்கிறார்கள். இருந்தாலும், அவர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கின்றார்கள். வடசென்னை ரவுடிசத்தை இயக்குனர் அப்படியே கண்முன் காண்பித்து இருக்கிறார். மேலும், அவர்களுக்கு இருக்கும் குரல், திமிரும், கண்ணுக்குள் பேசிக்கொள்ளும் வித்தை என அனைத்தையும் இயக்குனர் சிறப்பாக செய்திருக்கிறார்.

அதோடு வடசென்னை மக்களின் வாழ்க்கை முறையையும் இப்படத்தில் காண்பித்திருக்கிறார்.
ஆனால், இதை இன்னும் கொஞ்சம் சுவாரசியத்தை காண்பித்து இருந்தால் படம் சூப்பராக இருந்திருக்கும். ஆங்காங்கே, சில காட்சிகளை ஆரம்பித்து எப்படி முடிப்பது என்று தெரியாமல் திணறி இருக்கிறார் இயக்குனர். கதாநாயகி சாய் ப்ரியா சில காட்சிகளில் வந்து செல்கிறார். அவர் எதற்கு என்றே தெரியவில்லை. பாடல்களும் பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை.

கேமரா ஒர்க் நன்றாக இருக்கிறது. மொத்தமாக வடசென்னை பகுதியை அப்படியே காண்பித்து இருக்கிறார்கள் மற்றபடி வழக்கமான ரவுடி, அடிதடி, சண்டை, ரத்தம் என்று தான் இயக்குனரும் அரைத்த மாவை அரைத்து இருக்கிறார். இதை கொஞ்சம் வித்தியாசமாக சுவாரசியத்தோடு கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
மொத்தத்தில் சுமாரான படமாக இருக்கிறது.

நிறை:

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்

வடசென்னை மக்களின் வாழ்க்கையை இயக்குனர் அப்படியே காண்பித்து இருக்கிறார்

வடசென்னையில் இருக்கும் ரவுடி சத்தை கண் முன் நிறுத்தி இருக்கிறார்

ஒளிப்பதிவு ஓகே

குறை:

பின்னணி இசை

பாடல்கள் சுமாராகத்தான் இருக்கிறது

இயக்குனர் இன்னும் திரைக்கதையில் மெனக்கட்டிருக்கலாம்

கதைக்களத்தில் சுவாரசியத்தை கொடுத்திருந்தால் விறுவிறுப்பாக சென்றிருக்கும்

மொத்தத்தில் டை நோ சரஸ்- ஒரு முயற்சி

Advertisement