பரத்தின் முதல் படம் காதல், 50வது படம் லவ் வெற்றி கிடைக்குமா? முழு விமர்சனம் இதோ

0
1753
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் பரத். தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் லவ். இந்த படத்தில் கதாநாயகியாக வாணி போஜன் நடித்திருக்கிறார். இந்த படம் 2020ல் மலையாளத்தில் வெளிவந்த love படத்தின் ரீமேக். இந்த படத்தை ஆர் பி பாலா தயாரித்து இயக்கியிருக்கிறார். ஏற்கனவே தமிழ் சினிமாவில் முதன்முறையாக ஹீரோவாக பரத் நடித்த படம் காதல். தற்போது அவர் நடிக்கும் 50 வது படமும் லவ். இந்த படம் பரத்திற்கு கை கொடுக்குமா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் பரத், வாணி போஜன் இருவரும் காதலர்களாக இருக்கிறார்கள். பின் ஒரு கட்டத்தில் இவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுக்கிறார்கள். அதுபோல இவர்கள் திருமணமும் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பின் வழக்கமான கணவன் மனைவிக்கு வரும் சண்டைதான் இவர்கள் இருவருக்கும் வருகிறது. இதனால் தினமும் இருவரும் மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற பரத் வாணியை கொலை செய்து விடுகிறார்.

- Advertisement -

பின் வாணி போஜனின் உடலை பாத்ரூமில் மறைத்து வைக்கிறார் பரத். அதன் பின் பரத்தும் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அப்போது அந்த வீட்டுக்குள் பரத்தின் நண்பர் விவேக் பிரசன்னா வருகிறார். அடுத்து சில மணி நேரத்தில் வாணி போஜனின் அப்பாவும் அங்கு வருகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் அனைவருக்குமே வாணி போஜன் இறந்த உண்மை தெரிய வருகிறது. அவர்கள் உடலை அப்புறப்படுத்துகிறார்கள். சிறிது நேரம் கழித்து கதவை திறந்து பார்த்தால் வாணி போஜன் வந்து நிற்கிறார்.

இது பலருக்குமே ஷாக்கிங் ஆகிறது . அப்படி என்றால் பரத் கொலை செய்த நபர் யார்? வாணி போஜன் எப்படி வந்தார்? என்பது தான் படத்தின் மீதி கதை. படம் தொடங்கி 20 நிமிடம் வாணி பிணமாகவே காண்பிக்கிறார்கள். இந்த படத்தில் வாணி போஜன் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் என்று சொல்லலாம். இறந்து போன பிணமாக கண் சிமிட்டாமல் பொம்மை போல் வாணி போஜன் நடித்திருப்பது பிரமாதம்.

-விளம்பரம்-

காதல், சண்டை, கொலை என அனைத்தையும் இந்த படத்தில் இயக்குனர் காண்பித்து இருக்கிறார். பின்னணி இசை நன்றாக இருக்கிறது. இந்த படம் பெரியளவு சூப்பர் இல்லை என்றாலும் பரத்துக்கு இது ஒரு நல்ல படமாக அமைந்திருக்கிறது. ஆனால், தேவைப்படும் இடங்களில் அவருடைய எக்ஸ்பிரஷன் தான் சரியாக வரவில்லை. மேலும், ஒரு ஆண் தனக்கு பிரச்சனை ஏற்படும் போது பெண்களை குறை சொல்வது, பிரச்சனைக்கு தீர்வு வன்முறை இல்லை என்பதை இயக்குனர் சொல்லி இருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் முழு பிரச்சினைக்கும் ஈகோ தான் காரணம் என்பதை இயக்குனர் அழுத்தமாக சொல்லி இருக்கலாம். ஆரம்பத்தில் படம் விறுவிறுப்பை ஏற்படுத்தி இடையில் சலிப்பை ஏற்படுத்தி கிளைமாக்ஸ் காட்சி சூடு பிடித்து இருக்கிறது. மொத்தத்தில் லவ் படம் ஒரு நல்ல என்டர்டெயின் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

நிறை:

பரத்தின் நடிப்பு சிறப்பு

பின்னணி இசை படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது

கணவன் மனைவிக்கு நல்ல மெசேஜை இயக்குனர் கொடுத்திருக்கிறார்

முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது

கிளைமாக்ஸ் நன்றாக இருக்கிறது

குறை:

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

எமோஷனல் காட்சியில் பரத் நன்றாக நடித்திருக்கலாம்

இயக்குனர் இதை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக கொடுத்திருக்கலாம்

இடைவெளிக்கு பின் சில காட்சிகள் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது

மொத்தத்தில் லவ் படம்- ரணகளம்

Advertisement