விஜய் சேதுபதி வெளியிட்ட டிஜிகாப் (Digicop) App-ல் இத்தனை வசதிகள் இருக்கா.!

0
1352
Digicop
- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பகவத் கீதையை விஜய் சேதுபதி தயாராக பேசினார் என்று ஒரு வதந்தி வெளியானது. ஆனால், அது பொய்யான செய்தி என்றும் உண்மையில் அந்த பதிவு கடந்த பிப்ரவரி 6-ம் தேதி செல்போன் திருட்டைக் கண்டுபிடிக்கத் தமிழக காவல்துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட, ‘டிஜிகாப்’ என்ற மொபைல் செயலி குறித்து, காவல்துறை ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

-விளம்பரம்-

அப்போது விஜய் சேதுபதி, `காவல்துறைக்கும், பொதுமக்களுக்குமான இடைவெளி, இந்த `டிஜிகாப்’ செயலி மூலம் குறையும்” என்றார். இதைப் பிரபல செய்தி தொலைக்காட்சி பதிவிட்டது. இதை வேறு சிலரோ, விஜய் சேதுபதி சொன்ன கருத்துக்கு மாறாக பகவத் கீதையை அவதூறு கூறுவதுபோல் இருக்கும் வாசகத்தை போட்டோஷாப் மூலம் வைத்துள்ளனர். அதை சில சமூக வலைதள பக்கங்கள் விஜய் சேதுபதியின் கருத்து போல் பதிவிட்டிருந்தன.

இதையும் படியுங்க : ஆபத்தான அதிக கதிர்வீச்சை வெளியிடும் போனில் Xiaomi, OnePlus, Iphone.! ஆய்வில் வெளியான அதிர்ச்சி.! 

- Advertisement -

சரி, அந்த டிஜிகாப்’ செயலியில் அபப்டி என்னதான் சிறப்பம்சங்கள் இருக்கிறது என்று பார்க்கலாம். இந்த
டிஜிகாப்’ செயலி மூலம் நீங்கள் துளைத்து போன உங்கள் செல் போனை கண்டுபிடிக்கலாம், வாகனங்கள் குறித்த தகவல், வாகன நெரிசல் என்று பல விடயங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.

உங்கள் செல்போன் தொலைந்தால் இந்த டிஜிகாப் செயலி மூலம் உங்கள் செல்போனின் IMEI-ஐ பதிவு செய்து புகாரளிக்கலாம். பின்பு உங்களின் புகாரின் நிலை என்ன என்பதையும் அடிக்கடி செக் செய்து கொள்ளலாம். மேலும், நீங்கள் இரண்டாவதாக வேறு யாரிடம் இருந்தாவது செல் போன் வாங்கினால் அது திருட்டு போனா என்பதயும் நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.

-விளம்பரம்-

இந்த செயலியை பயன்படுத்தி வாகனங்கள் குறித்த தகவல்களும்,குறிப்பாக சென்னையில் எந்தெந்தப் பகுதிகளில் வாகன நெரிசல் ஏறப்பட்டுள்ளது என்ற தகவல்களும் உடனக்குடன் தெரிந்துகொள்ள முடியும். இந்த செயலி Playstore-ல் இலவசமாக உங்களுக்கு கிடைக்கிறது.

Advertisement