25 வருட கெரியரில் இவ்ளோ பெரிய நஷ்டத்தை சந்தித்ததில்லை – சகுந்தலத்தால் புலம்பும் தில் ராஜு. எத்தனை கோடி நஷ்டம் தெரியுமா ?

0
1052
Dilraju
- Advertisement -

சாகுந்தலம் படம் அட்டர் பிளாப் என்று படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு புலம்பி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. தமிழ், தெலுங்கில் தான் இவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் கடந்த ஆண்டு வெளிவந்த புஷ்பா படத்தில் “ஊ சொல்றியா” என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார். பின் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

அதன் பின் சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் யசோதா. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் சாகுந்தலம். இந்த படத்தை குணசேகர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன், அதிதிபாலன், கவுதமி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள். படத்திற்கு மணிசர்மா இசையமைத்து இருக்கிறார்.

- Advertisement -

சாகுந்தலம் படம்:

சகுந்தலா மற்றும் துஷ்யந்தின் நித்திய காதல் கதை தான் சாகுந்தலம். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பழமொழிகளில் வெளியாகி இருக்கிறது. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று இருந்தது. இந்த படத்தின் பட்ஜெட் 65 லிருந்து 70 கோடி. ஆனால், எதிர்பார்த்த எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்யவில்லை. இந்த படம் குறித்து ரசிகர்கள் பலரும் எதிர்மறையாக கூறி வருகின்றனர்.

தயாரிப்பாளர் தில் ராஜு:

மேலும், இந்த படத்தை தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில்ராஜு தயாரித்திருக்கிறார். இவர் தயாரிப்பாளர் மட்டுமில்லாமல் படத்தின் ரிலீஸ் உரிமைகளையும் வாங்கி செய்து வருகிறார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த வாரிசு படத்தையும் இவர்தான் தயாரித்திருந்தார். அந்த படம் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து மாஸ் காட்டிருந்தது. முதல் படத்திலேயே தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் தில் ராஜூ பிரபலம் ஆகிவிட்டார்.

-விளம்பரம்-

தில் ராஜூ அளித்த பேட்டி:

விஜய்யின் வாரிசு படத்திற்கு பிறகு தில் ராஜு சாகுந்தலம் படத்தை தயாரித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தை ஆந்திரா முழுவதும் தில்ராஜூ தான் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் சாகுந்தலம் படம் மிகப்பெரிய அளவில் தோல்வி சந்தித்தது பலருக்குமே அதிர்ச்சி. அது மட்டும் இல்லாமல் இந்த படம் 20 கோடி வரை நஷ்டம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சாகுந்தலம் படத்தின் தோல்வி குறித்து தயாரிப்பாளர் தில் ராஜு பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார்.

சாகுந்தலம் படம் குறித்து சொன்னது:

அதில் அவர், என்னுடைய 25 வருட கேரியரிலேயே மிகப்பெரிய அளவு நஷ்டத்தை ஏற்படுத்தியது சாகுந்தலம் படம் தான். சுமார் 60 கோடி பட்ஜெட்டில் இந்த படம் எடுக்கப்பட்டது. 10 கோடி கூட வசூல் செய்யவில்லை. அதோடு ரிலீசுக்கு முன்பு இந்த படத்தின் ஓடிடி உரிமையை 35 கோடிக்கு விற்று விட்டோம். அது மட்டும் செய்யாமல் இருந்தால் இந்த படம் இன்னும் பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று கூறினார். இதற்கு முன்பு சமந்தாவை வைத்து 96 படத்தின் ரீமேக்கான ஜானு படத்தையும் தில் ராஜு தயாரித்திருந்தார். அந்த படமும் படு தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement