‘இந்த சம்பவத்தைப் படமாக எடுங்க’- பரிந்துரைத்த ஆனந்த் மகிந்த்ரா, ராஜமௌலி சொன்ன ஆச்சர்ய பதில்

0
537
Rajamouli
- Advertisement -

இந்த கதையை படமாக எடுங்கள் என்று இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலிக்கு தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா பதிவிட்டு இருக்கும் டீவ்ட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. 2001-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளி வந்த திரைப்படம் ‘ஸ்டுடண்ட் நம்பர் 1’. இது தான் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய முதல் திரைப்படம். இதில் ஹீரோவாக ஜூனியர் என்டிஆர் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரின் ‘சிம்ஹத்ரி’, நித்தினின் ‘ஷை’, பிரபாஸின் ‘சத்ரபதி’, ரவி தேஜாவின் ‘விக்ரமார்குடு’ என அடுத்தடுத்து பல படங்களை இயக்கினார் எஸ்.எஸ்.ராஜமௌலி. மேலும், இவர் தெலுங்கு திரையுலகுடன் மட்டும் நம் திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்து ‘நான் ஈ, பாகுபலி 1 & 2’ ஆகிய படங்களை தமிழிலும் வெளியிட்டார்.

- Advertisement -

எஸ் எஸ் ராஜமௌலி திரைப்பயணம்:

இந்த மூன்று படங்களுமே மெகா ஹிட்டாகி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தந்தது. பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தின் மூலம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் ராஜ மௌலி. தற்போது ஆர் ஆர் ஆர் என்ற மற்றொரு பிரம்மாண்ட படத்தை தந்து இருக்கிறார். இந்த படத்தில் என் டி ஆர் மற்றும் ராம் சரண் முக்கிய நடிகர்களாக நடித்து இருக்கின்றனர்.

எஸ் எஸ் ராஜமௌலி இயக்கும் படம்:

இந்த படம் உலக அளவில் வெற்றி பெற்றது. அதோடு சமீபத்தில் நடந்த ஆஸ்கர் விருது விழாவில் ஆர் ஆர் ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு என்ற பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்து இருந்தது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ராஜமௌலி அவர்கள் மகேஷ்பாபுவை வைத்து படம் இயக்க இருக்கிறார். இந்த நிலையில் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா அவர்கள் ராஜமவுலி இடம் வரலாற்று படம் எடுக்க வேண்டும் என்று கேட்டு இருக்கும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

ஆனந்த் மகேந்திரா குறித்த தகவல்:

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக இருப்பவர் ஆனந்த் மகேந்திரா. இவருடைய சொத்து மதிப்பு மட்டும் 190 டாலருக்கு மேல் இருக்கு என்று சொல்லலாம். இவர் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆவார். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கிறார். மேலும், இவர் தொழில் சார்ந்த விஷயங்கள் மட்டும் இல்லாமல் சுவாரசியமான பல தகவல்களையும் ட்விட்டரில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் சிந்து சமவெளி நாகரிகத்தின் பழங்கால நகரங்களில் ஒன்று ஹரப்பா.

ஆனந்த் மகேந்திரா டீவ்ட்:

இது தொடர்பான ஒரு புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, நம் வரலாற்றை கண் முன் கொண்டு வருவது மட்டும் இல்லாமல் ஒரு நல்ல கற்பனையும் தூண்டுகிறது. இந்த பழங்கால நாகரிக வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு படம் ஒன்று எடுங்கள். அது நமக்கு வரலாறு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலியை டேக் செய்து இருக்கிறார். இதை பார்த்து எஸ்.எஸ் ராஜமவுலியும் பதில் போட்டிருக்கிறார். அதில் அவர், ஆமாம் சார். தோலாவிராவில் மகதீரா படத்தினுடைய படப்பிடிப்பு நடைபெற்றது.

ராஜமௌலி டீவ்ட்:

அங்கு நான் பழமை வாய்ந்த ஒரு மரத்தை பார்த்தேன். அது சிதைந்து போயிருந்தது. அதை பார்க்கும்போது எனக்கு சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி தான் நினைவுக்கு வந்தது. பின் இதை விவரிக்கும் படி ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது. அதன் பின் சில வருடங்கள் கழித்து நான் பாகிஸ்தான் சென்றிருந்தேன். அப்போது மொகஞ்சதாரோவிற்கு செல்ல வேண்டும் என்று முயற்சி செய்தேன். ஆனால், அங்கு செல்வதற்கு அனுமதி கிடைக்கவில்லை என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் கூடிய விரைவிலேயே பழங்கால நாகரிக வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ராஜமவுலி படம் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement