போதை பொருள் கும்பலுடன் தொடர்பா? இயக்குனர் அமீர் வெளியிட்டுள்ள விளக்கம்.

0
235
- Advertisement -

சமீப காலமாகவே போதை பொருள் கும்பலை கைது செய்யும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக டெல்லியில் போதை பொருள் கடத்தல் கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த வாரம் தெற்கு டெல்லியில் இரண்டு போதைப் பொருள் குடோனில் போலீசார் சோதனை நடத்தி .இருக்கிறார்கள் அதில் சுமாராக 1700 கிலோ மெப்பட்ரோன் என்ற போதை பொருளை பறிமுதல் செய்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அதற்பின் ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்துக்கு 50 கிலோ போதை பொருளை கடத்த முயன்ற போது டெல்லி மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு மற்றும் டெல்லி காவல்துறை இணைந்து அதிரடியாக சோதனை நடத்தி கைது செய்திருக்கிறார்கள். தேங்காய் பொடி மற்றும் ஊட்டச்சத்து பவுடருடன் சேர்த்து இந்த சூடோ பெடரின் எனப்படும் போதைப் பொருளை கடத்த முயற்சித்து இருக்கிறார்கள். பின் போலீஸ் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் விசாரிணை நடத்தி இருக்கிறார்கள். அப்போது விசாரணையில் இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக டெல்லியை மையமாக வைத்து தான் வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவது தெரிய வந்திருக்கிறது.

- Advertisement -

போதை பொருள் கடத்தல் கும்பல்:

மேலும், 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த போதை பொருள் கடத்தலுக்கு முக்கிய நபராக செயல்பட்டவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் என்று தெரிய வந்திருக்கிறது. அவர் தயாரிப்பாளர் ஜாபர் சித்திக் என்பது தெரிய வந்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இவர் கயல் ஆனந்தி நடித்து வரும் மங்கை என்ற திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்று தெரிய வந்திருக்கிறது. அதோடு இவர் போதை பொருள் சாம்ராஜ்யத்தின் தலைவராக இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் தன்னுடைய சகோதரர்கள் மைதீன் மற்றும் சலீம் ஆகியோருடன் இணைந்து தான் இந்த போதப்பொருள் கடத்தலில் ஈடுபடுகிறார் என்பது தெரிய வந்திருக்கிறது.

போலீஸ் விசாரணை:

மைதீன் இறைவன் மிகப் பெரியவன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் சலீம் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இதை அடுத்து போலீஸ், இந்த மூன்று பேருமே சினிமாவில் முதலீடு செய்து செய்துள்ளார்களா? என்னென்ன படத்திற்கு பைனான்ஸ் செய்திருக்கிறார்கள்? இவர்களுடைய சொத்துக்கள் எங்கெங்கு இருக்கிறது? என்ற தீவிர விசாரணைனையில் ஈடுபட்டு இருக்கிறது. அப்போது இயக்குனர் அமீர் அவர்கள் மைதீன் நடிக்கும் இறைவன் மிகப் பெரியவன் என்ற படத்தை இயக்கி வருவது தெரிய வந்திருக்கிறது. இதனால் அமீருக்கும் இந்த போதைப் பொருள் கடத்தல் விவகாரத்திற்கும் சம்பந்தம் இருக்கிறதா? என்று நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அமீர் அறிக்கை:

இந்நிலையில் இது தொடர்பாக அமீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், கடந்த இரண்டு நாட்களாக, எனது “இறைவன் மிகப் பெரியவன்” திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாஃபர் அவர்கள் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த 22-ம் தேதி நான் “இறைவன் மிகப் பெரியவன்” திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்த போது, திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஏன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது? என்னைச் சுற்றி என்ன நடக்கிறது? என்பதை ஊடகங்கள் வாயிலாகவே நான் அறிந்து கொண்டேன். உண்மை எதுவென்று இப்போது வரை எனக்குத் தெரியவில்லை.

போதை பொருள் கடத்தல் விவகாரம் குறித்து சொன்னது:

எதுவாயினும், செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால், அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமே.! நடிகர்களோடும், தயாரிப்பாளர்களோடும் சமரசங்களுக்கு உட்பட்டால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற கொள்கைக்கு நான் எப்போதும் எதிரானவன் என்பதை ஊடகத்துறையினர் நன்கு அறிவர். அந்த வகையில், சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போதும், நான் பத்திரிகையாளர்களை வழக்கமாகச் சந்திக்கும் எனது அலுவலகத்தில் திரைப்பட பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன். முழுவிபரங்கள் தெரிந்த பிறகு, விரைவில் பத்திரிகை மற்றும் ஊடக துறையினரைச் சந்திக்கின்றேன். இறைவன் மிகப் பெரியவன்!” என்று கூறி இருக்கிறார்.

Advertisement