விமல் ப்ரோமோஷனுக்கு வர்லன்னு சொன்னீங்க, எந்த படத்துக்கு அஜித் வரதே இல்லையே – நச் கேள்வி கேட்ட பத்திரிகையாளர் அமீர் சொன்ன பதில்.

0
640
Amir
- Advertisement -

படத்தின் ப்ரோமோஷனுக்கு அஜித் வராமல் இருப்பது குறித்து இயக்குனர் அமீர் அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் திரைப்படங்களில் மட்டும் இல்லாமல் துப்பாக்கி சுடுதல் , கார் மற்றும் பைக் ஓட்டுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதற்காக இவர் பல விருதுகளையும் வாங்கியிருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் துணிவு படத்தை எடுத்து இருக்கிறார்கள். இந்த துணிவு திரைப்படம் கடந்த மாதம் ஜனவரி 11ஆம் தேதி வெளியானது.

- Advertisement -

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இப்படி அஜித் பல படங்களில் நடித்தாலும் தன்னுடைய படத்தின் ப்ரோமோஷனுக்கு போவதில்லை. இது அனைவரும் அறிந்த ஒன்றே. இது குறித்து கூட பலரும் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அஜித்தின் மேனேஜர், நல்ல படத்திற்கு ப்ரமோஷன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் பட விழா ஒன்றில் நடிகர் விமல் ப்ரோமோஷனுக்கு வரவில்லை என்பதால் கடுமையாக பேசி இருந்தார் இயக்குனர் அமீர்.

இந்நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒருவர் விமல் ப்ரோமோஷனுக்கு வரவில்லை என்று கோபப்பட்டீர்கள் ஆனால், அஜித் இதுவரை எந்த ப்ரோமோஷனுக்கு போகாமல் இருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினார். அதற்கு இயக்குனர் அமீர் கூறி இருந்தது, அஜித் படத்தின் ப்ரோமோஷனுக்கு போவாரா? போகலையா? என்பது அவருடைய விருப்பம். அதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. பொதுவாகவே இப்போது இருக்கும் காலகட்டத்தில் பெரிய பெரிய நடிகர்கள், இயக்குனர்கள் எல்லோரும் தங்களுடைய படத்திற்காக பிரமோஷன் செய்கிறார்கள். அப்படி இருக்கும் போது சின்ன நடிகர்களும், இயக்குனர்களும் படத்தின் வெற்றிக்காக ப்ரோமோஷன் செய்வதில் தவறில்லை. இது மட்டும் தான் என்னுடைய கருத்து.

-விளம்பரம்-

அஜித் படத்தின் ப்ரோமோஷனுக்கு போவதும் போகாதிருப்பதும் அவருடைய விருப்பம் என்று கூறியிருக்கிறார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அமீர். இவர் மதுரையில் பிறந்து வளர்ந்தவர். இவர் பொறியியல் படிப்பு படித்து வளர்ந்தவர். இருக்கிறார். இவர் ஆரம்பத்தில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக தன்னுடைய திரையுலக பயணத்தை தொடங்கினார்.

பின் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த சேது மற்றும் நந்தா ஆகிய படங்களில் அமீர் பணியாற்றியிருக்கிறார். பின்னர் 2002 ஆம் ஆண்டு வெளிவந்து இருந்த மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார் அமீர். அதன் பின் இவர் பல படங்களை இயக்கி இருக்கிறார்.

Advertisement