விமான நிலையத்தில் மனைவியிடம் அடிவாங்கிய இயக்குனர் பாலா – ஏன் தெரியுமா !

0
9616

இயக்குனர் பாலா தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுக்க கூடியவர். கிட்டத்தட்ட 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் இயக்குனராக இருந்து வருகிறார். தனது முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றவர் பாலா.

bala

தற்போது இவர் இயக்கியுள்ள நாச்சியார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பொதுவாக பாலாவின் பாடங்கள் வணிக ரீதியாக வெற்றி பெறாது என்ற பேச்சு இருந்து வந்தது. நாச்சியார் படம் அந்த பேச்சினை தகர்த்து வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.

பாலாவிற்கு முத்துமலர் என்ற மனைவியும், அவர் மூலம் பிரார்த்தனா என்ற மகளும் உள்ளனர். ஒரு முறை பாலா மற்றும் அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் விமானநிலையம் சென்றுள்ளனர். விமான நிலையத்தில் பாலா, கால் மீது கால் போட்டு அமர்ந்துள்ளார். அப்போது அந்த வழியாக ஒரு வயதான மனிதர் கடந்து சென்றுள்ளார். இருந்தும் பாலா மரியாதை கொடுக்காமல் அப்படியே உட்கார்ந்துள்ளார். உடனே அவரது மனைவி முத்துமலர், பாலாவை ரெண்டு அடி அடித்து காலை கீழே போட சொல்லியுள்ளார். இந்த சம்பவத்தை ஒரு பேட்டியில் கலகலப்பாக கூறினார் பாலா.