தந்தை இறந்து ஓராண்டு கூட ஆகாத நிலையில், சத்தமில்லாமல் தனது மகளின் திருமணத்தை முடித்துள்ள சேரன் – அவரே பகிர்ந்த திருமண புகைப்படங்கள்.

0
284
- Advertisement -

தனது மூத்த மகளின் திருமணத்தை சத்தமில்லாமல் முடித்துள்ளார் இயக்குனர் சேரன். சேரனுக்கு செல்வராணி என்ற மனைவியும், நிவேதா மற்றும் தாமினி என்று இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் தனது மூத்த மகள் தாமணிக்கு திருமணத்தை முடித்துள்ளார் சேரன். கடந்த 22ஆம் தேதி இந்த திருமணம் நடைபெற்ற நிலையில் நேற்று திருமண புகைப்படங்களை பகிர்ந்ததுள்ளார் சேரன்.

-விளம்பரம்-

இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் ‘ ‘நேற்று நடந்த என் மகளின் திருமணத்தில் எனது பலமாய் நின்று காலையில் இருந்து மாலை வரை அனைத்து வேலைகளையும் சந்தோசமாய் பார்த்து வருகை தந்த அனைவரையும் மகிழ்வாய் அனுப்பிவைத்த என்னுடன் பணிபுரிந்த என் தம்பிகள் ( இயக்குனர் ஆனவர்களும் வருங்கால இயக்குனர்களும்) அனைவருக்கும் நன்றி.திருமணத்தை மனப்பூர்வமான வாழ்த்துடன் நடத்தித்தந்த திரு.ரவிக்குமார் சார், மரியாதைக்குரிய திருமதி ரவிக்குமார் அவர்களுக்கும், எங்கள் பெருமைக்குரிய இயக்குனர் இமயம் திரு.பாரதிராஜா, அன்பு அண்ணன் சீமான், திருமதி சீமான் அவர்களுக்கும் எங்கள் குடும்பத்தினர் சார்பாக மகிழ்ச்சியும் நன்றியும். என்று பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சேரனின் இளைய மகள் தாமினி சூளைமேட்டை சேர்ந்த டான்சர் சந்துருவை இயக்குநர் காதலித்தார். ஆனால், இவர்கள் காதலுக்கு சேரன் சம்மதிக்காததால் சேரன் மீது தாமினி போலீசில் புகார் அளித்திருந்தார். இதனால் சேரனை போலீசார் விசாரித்தனர். ஆனால், சந்துருவின் நடவடிக்கைகள் சரியல்ல என்பதால் மகளின் காதலை மறுப்பதாக சேரன் அறிவித்தார்.

ஆனால், சந்துருவுடன்தான் வாழ்வேன் என்று தாமினி பிடிவாதமாக இருந்தார். இந்த காதல் பிரச்சினை காரணமாக நீதிமன்ற உத்தரவுப்படி 2 வாரங்களுக்கு மேல் குடும்பத்தினரை பிரிந்து தலைமை ஆசிரியர் வீட்டில் தாமினி வைக்கப்பட்டிருந்தார். பின்னர் மனம் மாறிய தாமினி, சேரனுடன் செல்வதாகக்கூறி சென்றார். தனது மகள் விவகாரத்தில் சேரன் மிகவும் நொந்து போனார். அதற்க்கு முன்னர் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த சேரன் இந்த பிரச்னையில் சேரன் மீண்டு வர மிகவும் சிரமப்பட்டார்.

-விளம்பரம்-

பின்னர் எப்படியோ மகளை மூளை சலவை செய்து காதலனிடம் இருந்து பிரித்துவந்தார் சேரன். தனது காதலி தன்னை பிரிந்ததால் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அந்த சமயத்தில் கண்ணீர் மல்க பேட்டியளித்தார் தாமினியின் காதலன் சந்துரு. இதனை தொடர்ந்து தாமினி சேரனுடன் ஒன்று சேர்ந்தார். இப்படி ஒரு நிலையில் தனது மூத்த மகளுக்கு திருமணம் முடித்து நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொத்து இருக்கிறார் சேரன்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தான் சேரன் தந்தை உடல் நலக் குறைவால் காலமானார். சேரனுடைய தந்தை எஸ் பாண்டியன். இவர் தியேட்டரில் ஆப்பரேட்டராக பணியாற்றி இருந்தார்.இவருடைய சொந்த ஊர்வன பழையூர்பட்டியில் தான் பாண்டியன் வசித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் உடல் நிலை சரியில்லாமல் இருந்த அவர் கடந்த ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி காலமாகி இருந்தார். தந்தை இறந்து ஓராண்டு கூட ஆகாத நிலையில் மகள் திருமணத்தை முடித்துள்ளார் சேரன்.

Advertisement