விழுப்புரம் கோவில் விவகாரம்; ரகசியமாக கௌதமன் செய்து வந்த விசயத்தால் அதிரடி கைது

0
1725
- Advertisement -

கோயில் நுழைவு விவகாரத்தில் திரைப்பட இயக்குனர் கௌதமன் விழுப்புரத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. விழுப்புரம் மாவட்டம் மேல் பாதி கிராமத்தில் உள்ள அருள்மிகு தர்மராஜா திரௌபதி அம்மன் கோவிலில் பட்டியல் சமூக மக்கள் வழிபாடு செய்வதில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இந்த பிரச்சனை தொடர்ந்து சென்றதால் அந்த கோயிலுக்குள் வருவாய்த்துறையினர் கடந்த ஏழாம் தேதி பூட்டு போட்டு சீல் வைத்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இதனை அடுத்து வெளி நபர்கள் யாருமே அந்த பகுதிக்கு செல்லாத செல்லக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்கள். மேலும், இரு தரப்பினர் மக்களுக்கு மத்தியில் மோதல் ஏற்படாமல் இருப்பதற்காக போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருக்கிறது. இது குறித்த சர்ச்சை சோசியல் மீடியாவிலும் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் திரைப்பட இயக்குனர் கௌதமன் கைது செய்து ஆகி இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

திரௌபதி அம்மன் கோவில் விவகாரம்:

அதாவது, தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளரும், திரைப்பட இயக்குனருமான கௌதமன் ரகசியமாக பொதுமக்களை சந்தித்து பேசுவதற்காக மேல் பாதி கிராமத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு அவர் வன்னிய சமுதாயத்தை சேர்ந்த பெண்களிடம் பேச முயற்சித்து இருக்கிறார் இதனை அறிந்த வளவனூர் காவல் நிலைய அலுவலர் எஸ் பாலமுருகன் மற்றும் போலீசார் அங்கு சென்று கிராம மக்களிடையே இயக்குனர் கௌதமன் பேசுவதற்கு அனுமதி மறுத்திருக்கிறார்கள்.

கௌதமனை அழைத்து சென்ற போலீஸ்:

இதனை அடுத்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அவரை அழைத்து சென்றிருக்கிறார்கள். பின்னர் மாவட்ட எஸ்பி இயக்குனர் இடம் மேல் பாதி கிராமம் பிரச்சனை குறித்து சொல்லி இருக்கிறார். அப்போது கௌதமன், என்னை எதற்கு அழைத்து வந்தீர்கள்? என்னால் என்ன பிரச்சனை வரப்போகிறது? நான் அமைதியான முறையில் தான் பொதுமக்களிடம் பேச வந்தேன் என்று கூறியிருக்கிறார். உடனே கௌதமன், எஃப் ஐ ஆர் போட்டு என்னை கைது செய்யுங்கள் என்று கூறுகிறார்.

-விளம்பரம்-

கௌதமன் அளித்த பேட்டி:

பின் அவரை சமாதானம் செய்து நிலவரத்தை புரிய வைத்து இருக்கிறார் எஸ்.பி. இதனை அடுத்து கௌதமன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் அவர், மேல் பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் வழிபாடு செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. அங்குள்ள அரசியல் கட்சிகள் இந்த பிரச்சனையை பெரிது படுத்தியதன் மூலமாக தான் பூகம்பமாக வெடித்திருக்கிறது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால் திமுக கட்சி கூட்டணி கட்சியினர் தங்களுடைய இருப்பை உறுதி செய்து கொள்வதற்காக திட்டமிட்டு இதை தூண்டி விட்டிருக்கலாம்.

கோவில் பிரச்சினை குறித்து சொன்னது:

கோவில் பிரச்சினை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏழுமுறை அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கிறது. ஆனாலும், எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. திரௌபதி அம்மன் கோவில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரமும் கிடைக்கவில்லை. வன்னியர் சமூக மக்களை மட்டும் குறிவைத்து தாக்கும் நேர்மையற்ற போக்கை அரசியல் கட்சிகள் கைவிட வேண்டும். அரசியல் சுயநல லாபத்திற்காக மக்களிடையே வன்மத்தை தூண்டுபவர் யாராக இருந்தாலும் ஏற்க முடியாது. கோவில் அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாக வழிபாடு மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து என்று கூறி இருக்கிறார்.

Advertisement