வணங்கான் மற்றும் பாலாவை விமர்சித்து இயக்குனர் லெனின் பாரதி போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் பாலாவும் ஒருவர். இவர் சினிமாவில் பிரபலமான இயக்குனரான பாலு மகேந்திராவின் படைப்பில் இருந்து உருவாக்கப்பட்டவர். அதுமட்டுமில்லாமல் பாலா அவர்கள் சினிமா உலகில் இயக்குனர் ஆன முதல் படத்திலேயே தேசிய விருது பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின் இவர் சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார், வர்மா போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இருந்தார். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு இவர் இயக்கிய எல்லா படங்களுமே விருதுகள் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக பாலா படங்களில் முன்னணி நடிகர்கள் நடிக்கவே தயங்குவார்கள். அதற்கு முக்கிய காரணம் பாலா ஒரு டெரர் பீஸ்.
வணங்கான் படம்:
அது மட்டும் இல்லாமல் பாலா அவர்கள் இயக்குனர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளரும் ஆவார். தற்போது இவர் ‘வணங்கான்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக அருண் விஜய் நடித்து இருக்கிறார். ஹீரோவாக இதற்கு முன்பு இந்த படத்தில் சூர்யா தான் ஹீரோவாக கமிட்டாகி இருந்தார். படத்தின் படப்பிடிப்பும் மும்முரமாக நடந்தது. ஆனால், திடீரென அந்த படத்தில் இருந்து சூர்யா விலகி விட்டதாக தகவல் வந்தது.

படத்தின் கதை:
சூர்யா ஏன் விலகினார்? என்ற காரணத்தை மட்டும் இருவரும் சொல்லவில்லை. அதற்கு பின் இந்த படத்தில் ஹரோவாக அருண் விஜய் நடித்தார். இந்த படத்தை சுரேஷ் காமாட்சி, இயக்குனர் பாலாவும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரோஷினி நடித்திருக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். பொங்கல் விருந்தாக வெளியாகி இருக்கும் இப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
லெனின் பாரதி பதிவு:
இந்த நிலையில் வணங்கான் படம் மற்றும் இயக்குனர் பாலா குறித்தும் இயக்குனர் லெனின் பாரதி போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், பாலா அவர்களே, மாற்றுத் திறனாளிகள் மேல் பெருங்கருணை கொள்கிறேன் என்ற போர்வையில் உங்கள் ஆணாதிக்க & ஆழ்மன வக்கிரங்களை திரையில் காண்பித்து பெண்கள் மற்றும் சிறப்பு பாலியல் குற்றங்களுக்கு எதிராக போராடும் எண்ணத்தையும் சமூகத்தையும் பின்னுக்கு இழுக்காதீர்கள் என்று விமர்சித்து போட்டு இருக்கிறார்.

பாலா பற்றி சொன்னது:
தற்போது இவரின் பதிவுதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்தில் காது கேளாத வாய் பேச முடியாத ஆதரவற்றோர் இல்லத்தில் கோட்டி (அருண் விஜய்) வேலை பார்த்து வருகிறார். அங்குள்ள சிலர், அங்கிருக்கும் கண் தெரியாத அங்குள்ள பிள்ளைகள் குளிப்பதை பார்த்துவிட, அவர்களில் இருவரை கொடூரமாக கொன்று காவல் நிலையத்திலும் ஆஜராகி விடுகிறார் கோட்டி. அதற்குப் பிறகு என்ன ஆனது? அதாவது என்ன காரணத்திற்காக அந்த கொலையை கோட்டி செய்தான் என்று நீதிமன்றமும், காவல்துறையும் துருவி துருவி கேட்கிறது. அதற்கு கோட்டி பதில் சொன்னாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதி கதை.






