சிகரெட் பிடித்தால் தான் வெற்றி, 10 மணிக்கு தண்ணி அடிங்க – மேடையில் மிஷ்கினின் சர்ச்சை பேச்சு.

0
511
- Advertisement -

சிகரெட் பிடித்தால் தான் வெற்றி, 10 மணிக்கு தண்ணி அடிங்க! என்று போதை பொருளுக்கு ஆதரவாக மிஸ்கின் பேசியிருக்கும் பேச்சு தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. தமிழ் சினிமாவில் மிகவும் வித்யாசமான படங்களை கொடுப்பதில் கை தேர்ந்தவர் மிஸ்கின். தற்போது இவர் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். மிஸ்கின் திரைப்பட இயக்குநர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் முதலில் இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருந்தார்.

-விளம்பரம்-

அதன் பின் இவர் சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் அஞ்சாதே, யுத்தம் செய், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் ஒரு சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.

- Advertisement -

மிஸ்கின் திரைப்பயணம்:

தற்போது மிஸ்கின் அவர்கள் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து இருக்கிறார். முதல் பாகம், இரண்டாம் பாகத்திற்கும் எந்தவித தொடர்பு இல்லை என்றும், இது மாறுபட்ட கதை என்றும் சமீபத்தில் மிஸ்கின் கூறியிருந்தார். இந்த பிசாசு 2 படத்தை ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் முருகானந்தம் தயாரித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்து இருக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் குறித்த ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

மிஸ்கின் அளித்த பேட்டி:

இப்படி ஒரு நிலையில் டைனோசர்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் மிஷ்கின் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தார். அப்போது விழாவில் மிஸ்கின் கூறியிருந்தது, இயக்குனர் முகத்தை பார்த்தால் சிகரெட் நிறைய பிடிப்பவர் மாதிரி இருந்தது. அப்பவே படம் ஹிட்டுன்னு எனக்கு தெரியும். நான் முதல் படம் பண்ணும் போது ஒரு நாளைக்கு 100 சிகரெட் பிடிப்பேன். அஞ்சாதே படம் பண்ணும் போதெல்லாம் 120 சிகரெட் அடித்தேன். அந்த டென்ஷன் இருந்தால் தான் அவர் இயக்குனர். இந்த படம் நிச்சயம் ஹிட்டாகும் என்று நினைக்கிறேன்.

-விளம்பரம்-

விழாவில் மிஸ்கின் சொன்னது:

என் தம்பி இந்த விழாவுக்கு போனி கபூர் வருவார் என்று சொன்னார். எனக்கு போனிக்கைபூர் தெரியாதுன்னு சொல்லிட்டேன். நமக்குத் தானுன்னா தெரியும். போனி கபூர் தெரியாது. எனக்கு ஸ்ரீதேவி தெரியும். அவர் சிறந்த நடிகைகளில் ஒருவர். இந்த இடத்தில் ஸ்ரீதேவியின் ஸ்பிரிட் தான் உங்களை வாழ்த்த போகிறது. அவர்களை நான் ரொம்ப மிஸ் பண்றேன். போனிகபூர் அருகில் இருப்பதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஒவ்வொருவராக பேசும் போது டச் அப் பாய் எல்லோரும் பேசுவாங்களா என போனி கபூர் என்னிடம் கேட்டார்.

மிஷ்கினின் சர்ச்சை பேச்சு:

நார்த் இந்தியாவில் ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் தான் பேசுவாங்க போல. இங்க அப்படி இல்லை சார். தமிழ்நாட்டில் எல்லோரும் பேச வாய்ப்பு கொடுப்போம். எல்லோரும் வாழ்த்துவோம் சார். இதுதான் தமிழ்நாடு. அதேபோல் வெற்றிமாறன் கலைக்காக படம் பண்றார். அதில் கலாய்க்கிற விஷயங்களும் இருக்கிறது. இப்போ பாலா படம் பண்ணுகிறார். இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குனர். அவர் தண்ணி அடிக்கிறாரா என கேட்டேன். இல்லை சார் என்று சொன்னார். பாலா இன்னும் 40 வருடங்கள் படங்களை இயக்க வேண்டும். 10 மணி ஆயிடுச்சு எல்லோரும் வீட்டுக்கு போங்க தண்ணி அடிங்க, தம் அடிங்க, தூங்குங்க என்று பேசியிருந்தார். இப்படி இயக்குனர் மிஸ்கின் போதைப் பொருளுக்கு ஆதரவாக பேசி இருப்பதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement