பரியேறும் பெருமாள் படத்தின் ஹிந்தி ரீமேக் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த படம் பரியேறும் பெருமாள். இந்தப் படத்தை பா ரஞ்சித் தயாரித்திருந்தார். இந்த படத்தில் கதிர், ஆனந்த், யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களையும், வசூலையும் பெற்றிருந்தது.
அதோடு இந்த படம் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் முதல் தலைமுறையாக கல்வி மற்றும் பொருளாதாரத்தில் முன்னேறும் இளைஞன் தன்னுடைய வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக கொண்டு இப்படமானது உருவாக்கப்பட்டது. இந்த படம் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது. இது தொடர்ந்து பல விருதுகளையும் வென்றது.
இந்த படம் குறித்து பிரபலங்கள் பலரும் பாராட்டி இருந்தார்கள். ஜாதி வெறி பிடித்தவர்களின் முகத்திரையை கிழிக்கும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது. அதோடு சமூக நீதிக்கான ஒரு படமாக இது அமைந்தது. இந்த நிலையில் பரியேறும் பெருமாள் படத்தின் ஹிந்தி ரீமேக் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வரலாகி வருகிறது. அதாவது, இந்த படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோகர் வாங்கி இருக்கிறார்.
இது முழுக்க முழுக்க காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன் பின்னணியில் உள்ள ஜாதியை பற்றி பேசும் படமாக கரன் ஜோக்கர் எடுக்க திட்டமிட்டு இருக்கிறார். இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சித்தார்த் சதுர்வேடியும், டிரிப்டி டிமிரி ஆகியோர் நடிக்கிறார்கள். தற்போது இந்த படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வெளியானது தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
காரணம், புகழ்பெற்ற மராத்திய ஜாதி கொடுமையால் இழந்து போன காதலை சமூகத்திற்கு தோல் உரிக்கும் மராத்திய படம் சாய்ராட். இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்தார்கள். இதில் ஸ்ரீதேவியின் மகளான ஜான்விகபூர் நடித்திருந்தார். சாய்ராட் படத்தின் கதையை மட்டும் வைத்துக்கொண்டு பாலிவுட்டுக்கு ஏற்றவாறு இவர்களே இஷ்டத்துக்கு மாற்றி இருந்தார்கள். இதனால் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவு வெற்றியடையவில்லை.
இதே போல் சர்வதேச அளவில் பெரும் விமர்சனங்களை பெற்ற அருவி திரைப்படத்தையும் ஹிந்தியில் ரிமேக் செய்து இருந்தார்கள். ஆனால், அந்த படமும் எதிர்பார்த்த அளவிற்க்கு வெற்றி கொடுக்கவில்லை. தற்போது பரியேறும் பெருமாள் படத்தை ஹிந்தியில் இயக்குகிறார்கள். இந்த படமாவது வெற்றி அடையுமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.