பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிரட்டல், துணிவில்லாத அமைச்சர் கயல்விழி – ரஞ்சித் கண்டனம்.

0
495
Paranjith
- Advertisement -

இயக்குனர் பா ரஞ்சித் தன்னுடைய ட்விட்டர பக்கத்தில் போட்டிருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி விவாத பொருளாக மாறியுள்ளது தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் பா. ரஞ்சித். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவரின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து வட சென்னை,ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா போன்ற படங்களை இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

இயக்கிய படங்கள் :

இவ்விரு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகி இருந்த படம் சார்பட்டா பரம்பரை. அந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது இயக்கி வரும் படம் தங்காலன் இப்படத்தில் சியான் விகாரம் நடித்து வருகிறார். மேலும் பா ரஞ்சித் இயக்கம் படங்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தை பற்றியே படமாக்கப்பட்டிற்கும். இந்த நிலையில் பா ரஞ்சித் தமிழ் நாட்டின் காவல் துறையை எதிர்த்து ட்விட்டர் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

- Advertisement -

குடிநீரில் மலம் கலந்த விவகாரம் :

புதுகோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சியில் உள்ள இரையூர் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசித்து வரும்பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் மலம் என்ற அதிர்ச்சி தகவல் வந்ததை அடுத்து வெள்ளனுர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் காவல் கண்காணிப்பாளர் வந்திகா தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்த போலீசார் :

அந்த ஆய்வின் போது பட்டியலின மக்களை அங்குள்ள அய்யனார் கோவிலுக்கு செல்ல அனுமதிக்க படுவதில்லை என்பதும், தேநீர் கடையில் இரட்டை குவளை முறை இருப்பது தெரிந்ததும், உடனடியாக பட்டியலின மக்களை கோவிலுக்கு அழைத்து சென்று வழிபட வைத்தார் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, அப்போது சாமி வந்ததை போல நடித்து பட்டியலின மக்களை இழிவு படுத்தியதற்காக சிங்கம்மாள் மற்றும் அஞ்சப்பன் மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டனர். மேலும் தேநீர் கடையயை சேர்ந்த மூக்கையா மற்றும் அவரது மனைவியையும் கைது செய்தனர்.

-விளம்பரம்-

முதலமைச்சர் விளக்கம் :

மேலும் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்தவர்களை கண்டுபிடிக்க திருச்சி சரக டிஜஜி தரப்பில் ஏடிஎஸ்பி ரமேஷ் கிருஷ்ணன் தலைமையில் 11 பேர் கொண்ட விசாரணை குழு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் முக ஸ்டாலின் சட்ட சபையில் கொடுத்துள்ள அறிவிப்பில் குடிநீரில் மலம் கலந்த குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து கைது செய்யாடுவர் என்றும் இதுவரையில் 70 பேரிடம் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

பா ரஞ்சித் ட்விட்டர் பதிவு :

இப்படிப்பட்ட நிலையில் தான் பிரபல தமிழ் சினிமா இயக்குனரான பா ரஞ்சித் இந்த விவகாரம் குறித்து போட்டுள்ள பதிவில் தொடரும் சமூக அநீதி! புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டி மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய முயற்சிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களை குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு விசாரணை என்ற பெயரில் மிரட்டி வருவதாக தமிழக காவல் துறை மீது கடும் கண்டனத்தை வைத்துள்ளார். இந்த பதிவு தற்போது சர்ச்சையாக மாறி சோசியல் மீடியாவும் பேசு பொருளாக மாறியுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் கயல் விழியை தனித்தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது கண்டணங்களை தெரிவித்துள்ளார்.

Advertisement