‘சண்டே அன்னிக்கி சண்ட போட முடியும், ஆனா மண்டே அன்னிக்கு’ – அதிதி சொன்ன மொக்க ஜோக். வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

0
587
aditi
- Advertisement -

விருமன் பட வெற்றி விழா கொண்டாட்டத்தில் அதிதி சொன்ன மொக்க ஜோக்கால் நெட்டிசன்கள் பலர் அவரை வச்சி செய்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் உலகில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் இயக்குனர் சங்கர். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் இவருடைய படங்கள் எல்லாமே பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

-விளம்பரம்-

தற்போது இவர் ராம் சரணை வைத்து படம் இயக்கி வருகிறார். இந்த சூழ்நிலையில் இயக்குனர் சங்கரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர் தமிழ் சினிமா உலகில் கதாநாயகியாக களம் இறங்கி இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் முன்னணி ஹீரோவாக திகழ்ந்து கொண்டு இருக்கும் கார்த்தி படத்தில் தான் சங்கர் மகள் அதிதி நடித்து இருக்கிறார். கார்த்தி ஹீரோவாக நடித்து இருக்கும் படம் ‘விருமன்’. இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்கி இருக்கிறார்.

- Advertisement -

விருமன் படம்:

கொம்பன் படத்திற்கு பிறகு கார்த்திக் மற்றும் முத்தையா இந்த படத்தில் இணைந்துள்ளார்கள். இந்த படத்தை சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். மேலும், இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். விருமன் படமும் கிராமத்து கதையம்சத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் மூலம் தான் அதிதி சங்கர் தமிழ் சினிமா உலகில் கதாநாயகியாக களம் இறங்கி இருக்கிறார்.

படத்தின் வசூல்:

இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதோடு இந்த படத்தில் இடம் பெற்ற மதுர வீரன் பாடலை அதிதி தான் பாடி இருக்கிறார். இந்த படம் வெளியாகி நல்ல வசூல் சாதனை படைத்திருக்கிறது. அது மட்டுமில்லாமல் நடிகை அதிதிக்கும் இந்த படம் சிறந்த தொடக்கமாக அமைந்திருக்கிறது. இந்த படத்தின் மூலம் அதிதிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது.

-விளம்பரம்-

முதல் படத்திலேயே கிடைத்த பாராட்டு :

முதல் படத்திலேயே அனுபவம் வாய்ந்த நடிகை போல தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று இருக்கிறார். அதிதி அதேபோல அதிதி படபிடிப்பு தளத்தில் மிகவும் சுற்றித்தனமாக நடந்ததாக இந்த படத்தில் பணியாற்றிய கார்த்தி, சூரி போன்ற பலர் கூறியிருந்தார்கள். மேலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் அடிக்கடி அதித்தி மொக்க ஜோக்கை போட்டு தங்களை வறுத்து எடுத்ததாகவும் சூரி மற்றும் கார்த்திக் கூறியிருந்தார்கள்.

விருமன் வெற்றி கொண்டாட்டம் :

அதே போல விருமன் படத்திற்கு பின்னர் அதிதி பல பேட்டிகளில் பங்கேற்று இருந்தார். அதில் கூட படு சுட்டித்தனமாகவே பேசியதோடு பல மொக்கை ஜோக்குகளை கூறி இருந்தார் அதிதி. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் விரும்பன் படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் மதுரையில் உள்ள ஒரு திரையரங்கில் நடைபெற்றது இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அதிதி மொக்கை ஜோக்கை கூறி இருந்தார்.

அதிதியின் மொக்கை ஜோக் :

இந்த விழாவில் வழக்கம் போல தனது சுட்டித்தனத்தை வெளிப்படுத்துவதாக நினைத்து மொக்க ஜோக் ஒன்றை கூறியிருந்தார். அதில் சண்டே ‘அன்னைக்கு சண்டை போட முடியும் மண்டை அன்னிக்கு மண்ட போட முடியுமா’ என்று மதுரை முத்துவையே மிஞ்சும் அளவிற்கு கடி ஜோக்கை கூறியிருந்தார். இதனைக் கேட்டு அங்கு இருந்தவர்கள் அனைவரும் சிரித்தாலும் தற்போது இந்த வீடியோவை கண்டு நெட்டிசன்கள் பலரும் அதிதியை கேடு செய்து வருகிறார்கள்.

அதிதியின் அடுத்தடுத்து படங்கள் :

விருமன் பட வெற்றியை தொடர்ந்து அதிதிக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. விருமன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் மாவீரன் படத்தில் அதிதி நாயகியாக கமிட்டாகி இருக்கிறார். இதனை தொடர்ந்து சிம்பு நடிக்க இருக்கும் கொரோனா குமார் படத்திலும் அதிதி நாயகியாக கமிட்டாகி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement