பாரதி ராஜாவை கோர்ட்க்கு போக சொல்லுங்க..!சவால் விட்ட 96 பட இயக்குனர் பிரேம்

0
840
prem
- Advertisement -

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படத்தின் கதை திருட்டு விவகாரம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் முடிவடைந்தது. இந்நிலையில் சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “96” படமும் கதை திருட்டு தான் என்று இயக்குனர் பாரதி ராஜா குற்றம் சாட்டியிருந்தார்.

-விளம்பரம்-

இயக்குனர் பிரேம்:

- Advertisement -

prem

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ’96’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் , இதே போன்ற கதை தன்னிடம் இருந்ததாகவும் அதனை பாரதி ராஜாவை இயக்க வைத்து இளையராஜாவை இசையமைக்க வைக்க திட்டமிட்டிருந்தாகவும் பாரதி ராஜாவின் உதவி இயக்குனராக பணியாற்றிய சுரேஷ் என்பவர் குற்றச்சாட்டை முன்வைதிருந்தார்.

-விளம்பரம்-

மேலும், அந்த படம் தன்னுடைய நிஜ வாழ்க்கையில் நடந்த கதை என்றும் அதற்கு ’92’ என்று பெயர் வைத்ததாகவும் கூறி இருந்தார். இந்நிலையில் பட திருட்டு குற்றச்சாட்டுக்கு சமீபத்தில் பிரஸ் மீட் ஒன்றை வைத்து விளக்கமளித்துள்ளார் இயக்குனர் பிரேம் குமார்.

இந்த பிரஸ் மீட்டில் பேசிய அவர், பிரேமம் படம் வந்த போது அது சேரனின் ‘ஆட்டோகிராப்’ கதை போலவே இருந்தது என்று கூறினார்கள். அதே போல ’96’ படம் வந்த போது சேரன் பலரும் ஆட்டோகிராப் படத்துடன் சாப்பிட்டனர்.ஆனால், சேரன் சார் இரண்டும் வெவ்வேறு கதை என்று தெளிவு படுத்தினார்.

premkumar

அதே போல இயக்குனர் ராம், நலன் குமார சாமி போன்றவர்களின் வாழ்க்கையிலும் ’96’ படத்தின் போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது.96 படம் ஒரு தனித்துவமான கதை அதில் வரும் சம்பங்கள் போன்று அனைவரது வாழ்க்கையிலும் நடந்திருக்கும். இயக்குனர் சுரேஷ் கூறும் 92 படத்தின் கதை தஞ்சாவூரில் நடப்பது போல இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். நானும் தஞ்சாவூரில் தான் படித்தேன் நான் என்னுடைய பள்ளி நண்பர்களின் ரீ யூனியனில் கலந்து கொள்ளவில்லை. அதே போல இந்த கதையின் டிஸ்கஷனின் போது ரீ யூனியனில் கலந்து கொண்ட என் நண்பர்களை வைத்து தான் இந்த கதையை எழுதினேன்.

இந்த கதையை நன் 2016 ஆம் ஆண்டே பதிவு செய்து விட்டேன்.ஆனால், இயக்குனர் சுரேஷ் இந்த கதையை எப்போதோ தயார் செய்து விட்டேன் ஆனால், போதிய பண வசதி இல்லாததால் நான் பதிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார். பாரதி ராஜாவிடம் 10 ஆண்டுகளுக்கு மேல் உதவி இயக்குனராக இருந்த ஒருவரிடமா பணமில்லை. இது என்னுடைய கதை தான் அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. இந்த பிரச்சனையை பிரச்சனையைபற்றி கேட்க இயக்குனர் பாரதிராஜா அவரருடைய வீட்டுக்கு என்னை அழைத்தார். நான் ஏன் போக வேண்டும், நான் சட்ட ரீதியாக சந்திக்க தயார் என்று கூறியுள்ளார் பிரேம்.

Advertisement