விஐய் ஆண்டனி மகள் போல தனது தங்கையும் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது இறந்துவிட்டதாக சுசீந்திரன் கூறியுள்ளார்.இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இவர் முதலில் தமிழ் சினிமாவில் சுக்ரன் படத்தின் மூலம் தான் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இதனிடையே கடந்த 2006ஆம் ஆண்டு பாத்திமா என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2005 வெளியான சுக்ரன் படத்தின் மூலம் அறிமுகமான இவர் பின்னர் நான் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானார். அந்த படத்தை தயாரித்தது அவரது மனைவி பாத்திமா தான். இந்த தம்பதிக்கு ஒரு மகளும் இருக்கின்றனர்.
இப்படி ஒரு நிலையில் விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று அதிகாலை அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மீராவின் இறப்பிற்கு பலர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் பல பிரபலங்கள் நேரில் சென்று தங்கள் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் சுசீந்திரன் மீராவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அஞ்சலி செலுத்திவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய இயக்குனர் சுசீந்திரன் ‘எனக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. நிறைய முறை நான் இந்த வீட்டிற்கு வந்திருக்கிறேன். எப்போதும் சிரித்த முகத்துடன் அவள் பேசுவாள். இன்று காலை இந்த செய்தியை கேட்டவுடன் என்னால் நம்ப முடியவில்லை.இரண்டு மூன்று பேர்களிடம் இது உண்மைதானா இல்லை ஏதாவது போலியான செய்தியா என்று கேட்டேன்.
இதை உண்மை என்று நம்புவதற்கு எனக்கு அரை மணி நேரம் ஆனது. விஜய் ஆண்டனி சாருக்கு வீட்டை விட்டால் வேறு உலகம் கிடையாது. வேலை விட்டால் வீடு, வீடு விட்டால் வேலை என்று இருப்பார். குடும்பம் தான் அவருக்கு உலகம். இந்த அதிர்ச்சியை அவர் எப்படி தாங்கிக் கொள்ளப் போகிறார் என்பது தெரியவில்லை. எல்லாம் வல்ல இறைவன் அந்த குடும்பத்திற்கு ஊக்கத்தை கொடுக்க வேண்டும்.
அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று இந்த இடத்தில் வேண்டிக் கொள்கிறேன். இதே வயதில் 18 வருடங்களுக்கு முன்னர் என்னுடைய தங்கை பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது இறந்தால். நான் பெற்றோர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் 17,18 வயதில் குழந்தைகளை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் ஏனென்றால் அது மிகவும் முக்கியமான வயது அவர்களுக்கு முடிவெடுக்கத் தெரியாத வயசு தனது பேச்சை தொடரமுடியாமல் பாதியிலேயே விட்டு சென்றார் சுசீந்திரன்.