இதனால் தான் லைவ் வரமுடியவில்லை – காலில் கட்டும், வாக்கிங் பிரேமில் தாங்கிநின்றபடி புகைப்படத்தை பதிவிட்ட டிடி.

0
2598
dd

அன்றும் இன்றும் என்றும் ரசிகர்களின் பேவரைட் தொகுப்பாளினியாக திகழ்ந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. அந்த அளவிற்கு தன்னுடைய பேச்சு திறனாலும் சுட்டிதனத்தாலும் அனைவரையும் கட்டி இழுத்து உள்ளார். இவர் அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் படிப்பை படித்து முடித்து உள்ளார். டிடி தன்னுடைய ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக சின்னத்திரைக்கு அறிமுகமானவர். நடிகை டிடி அவர்கள் வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்குகிறார்.

திவ்யதர்ஷினி அவர்கள் தமிழ் திரைப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.இதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளராக தொகுத்து வழங்கி உள்ளார். இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

இதையும் பாருங்க : உண்மையை சொன்னால் இப்படி கேவலமா நடந்துபீங்களா- மீண்டும் விஜயபாஸ்கரை சீண்டும் மீரா.

- Advertisement -

டிடி சிறந்த தொகுப்பாளினியாக பல முறை பல்வேறு விருதுகள் கிடைத்திருக்கிறது. சமீபத்தில் கூட இவருக்கு “டார்லிங் ஆப் தி டெலிவிஷன்” அவார்ட் தந்து உள்ளார்கள். மேலும், டிடி அவர்கள் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். அதில் தனது புகைபடங்களை வெளியிடுவது வழக்கம்.

இந்நிலையில் தொகுப்பாளினி டிடி அவர்கள் கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் தனது பழைய புகைப்படங்களை மட்டும் பதிவிட்டு வந்தார். ரசிகர்கள் இவரை லைவுக்கு வாங்கள் என்று அழைத்துள்ளார்கள். ஆனால், தற்போது இவர் பதிவிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதை பதிவிட்டு டிடி அவர்கள் கூறியது, நிறைய பேர் என்னை லைவுக்கு வர சொன்னிங்க.

இதையும் பாருங்க : துளியும் மேக்கப் இல்லாமல் மஞ்சிமா வெளியிட்ட புகைப்படம். கொள்ளை அழகு தான்.

-விளம்பரம்-

நான் வராது காரணம் இது தான் என்றும் பதிவிட்டுள்ளார். லாக்டவுனுக்கு பின் நடந்த விபத்தால் டிடியின் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் முழுவதும் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார். தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி அவர்கள் ஸ்ரீகாந்த ரவிச்சந்திரன் என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்தார். பின் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் கடந்த 28ம் தேதி இவர்களுக்கு திருமணம் நடை பெற்றது.

பிறகு திருமணம் ஆன சில மாதங்களிலேயே இவர்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. திவ்யதர்ஷினி தனது காதல் கணவரை பிரிய முடிவெடுத்து 2017 ஆம் ஆண்டு இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்துக்கு பின்னரும் தனது தொகுப்பாளினி பணியை செய்து வருகிறார் டிடி. தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் speed Get Set Go என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertisement