ஜீ.வி. பிரகாஷின் செல்பி படத்திற்கு ‘எச்சரிக்கை’ அறிக்கை போட்ட இயக்குனர் தங்கர்பச்சன்- பின்னணி என்ன?

0
418
thangar
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ஜீ.வி. பிரகாஷ். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் இசையமைப்பாளர், பாடகர் என பல துறைகளில் கலக்கி கொண்டு இருக்கிறார். இவர் இசைத்துறையில் புகழ்பெற்ற ஏ.ஆர்.ரகுமானின் அக்கா மகன் ஆவார். மேலும், இவர் முதன் முதலாக வெயில் படத்தில் தான் இசை அமைத்து சினிமா துறையில் அறிமுகமானார். இந்த படத்தில் வெளிவந்த பாடல்கள் எல்லாம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து நிறைய படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. கடைசியாக இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஜெயில் படத்தில் ஜீ.வி. பிரகாஷ் நடித்து உள்ளார் .

-விளம்பரம்-

இந்த படத்தில் அபர்ணதி, ராதிகா சரத்குமார் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்த படத்தை க்ரிக்ஸ் சினிமாஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார். சென்னைக்கு வெளியே மறுகுடியமர்வு செய்யப்பட்ட மக்களின் அவலங்களை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டிய படமாக ஜெயில் அமைந்திருக்கிறது. இதனை தொடர்ந்து இவர் அடங்காதே, ஐங்கரன், டிராப் சிட்டி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் அடங்காதே , வாடிவாசல் போன்ற பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

- Advertisement -

ஜி.வி. பிரகாஷின் செல்பி படம்:

மேலும், சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி வரும் இடி முழக்கம் படத்திலும் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார். இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு இயக்குனர் தங்கர்பச்சன் அளித்து உள்ள எச்சரிக்கை அறிக்கை சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இயக்குநர் வெற்றி மாறனின் உதவி இயக்குநர்களில் ஒருவரான மதிமாறன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள படம் செல்பி. இந்த படம் ஆக்சன், திரில்லர் பாணியில் உருவாகி உள்ளது. இந்தப் படத்தில் இயக்குநர் கவுதம் வாசு தேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிகில் திரைப்படத்தில் நடித்திருந்த வர்ஷா பொல்லம்மா இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

கலைப்புலி எஸ்.தாணு தன்னுடைய ‘வி கிரியேசன்ஸ்’ மூலம் இந்த படத்தை தயாரித்து உள்ளது. மேலும், இந்த படம் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் தங்கர்பச்சான் அவர்கள் எச்சரிக்கை என்ற பெயரில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பது, கல்விக்கூடங்கள்‌ பணம்‌ கொள்ளையடிக்கும்‌ கூடங்களாக உருவாக்கப்பட்டப் பின்‌ தமிழ்‌ நாடு அதன்‌ கல்வியின்‌ தரத்தை இழந்து வருகின்றது. இந்த தனியார்‌ கல்விக்கூடங்கள்‌ எப்படிப்பட்ட தரகர்களை உருவாக்கி வைத்துள்ளது. இதில்‌ அப்பாவி பெற்றோர்களும்‌ மாணவர்களும்‌ தொடர்ந்து பலியாகிக்கொண்டிருக்கிறார்கள்‌.

-விளம்பரம்-

செல்பி படம் குறித்து தங்கர்பச்சான் கூறியது:

இந்த உண்மையை நேர்த்தியாக பொருள்‌ உரைக்க பதிவு செய்வது தான்‌ “செல்பி” திரைப்படம்‌. மதிமாறன்‌ எனும்‌ புதிய இயக்குநரின்‌ ஆற்றலும்‌ திறமையும்‌ வியப்பில்‌ ஆழ்த்துகின்றன. அதேபோன்று குணாநிதி எனும்‌ அறிமுக நடிகரின்‌ இயல்பான மனம்‌ கவரும்‌ நடிப்பாற்றல்‌ நம்பிக்கை ஊட்டுகின்றன. ஜிவி பிரகாஷ்‌ முதன்மை பாத்திரத்தை தாங்கி நிற்கின்றார்‌. இதுவரை இல்லாத அளவிற்கு இப்படம்‌ அவரின்‌ திரைப்பயணத்தை மேலும்‌ விரிவுப்படுத்தும்‌. முழு திரைக்கதையின்‌ மையப்புள்ளியான எதிர்‌ நாயகன்‌ பாத்திரத்தில்‌ கவுதம்‌ மேனன்‌ நடிப்பு தான்‌ இத்திரைப்படத்தின்‌ கருவிற்கு மேலும்‌ வலுவூட்டுகின்றது.

வைரலாகும் இயக்குனர் தங்கர்பச்சான் அறிக்கை:

திரையில்‌ தோன்றும்‌ அனைத்து நடிகர்களும்‌ சிறு பிசுகில்லாமல்‌ நடிப்பது ஒன்றே இயக்குநரின்‌ திறனை பறை சாற்றும்‌. கடலூர்‌ மாவட்ட வட்டார வழக்கு மிக சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்களைக்‌ காப்பாற்றுவதாக கூறப்படும்‌ நான்கு தூண்களும்‌, அதன்‌ மீதான நம்பிக்கையினை இழந்து கொண்டிருக்கும்‌ நிலையில்‌ திரைப்படங்கள்‌ தான்‌ அரிதாக எப்பொழுதாவது சமூகத்தின்‌ சிக்கல்‌ சீர்கேடுகள்‌ குறித்து கேள்வி எழுப்புகின்றன. “செல்பி” அதனை திறம்பட செய்திருக்கின்றது. வெறும்‌ பணப்பைகளை நிரப்புவதற்காக மட்டுமே உருவாக்கப்படும்‌ திரைப்படங்களுக்கு இடையில்‌ இப்படைப்பின்‌ வரவு கவனத்துக்குறியது என்று இயக்குனர் தங்கர்‌ பச்சான்‌ ’செல்பி’ திரைப்படம் குறித்து கூறியுள்ளார். இப்படி இவர் வெளியிட்ட அறிக்கை சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

Advertisement