வெளிநாட்டில் தனது மனைவி, பிள்ளைகளுடன் இயக்குனர் வெற்றிமாறன். இவருக்கு இவ்வளவு பெரிய மகன் மற்றும் மகளா?

0
158
- Advertisement -

வெற்றிமாறனின் மகள் மற்றும் மகனின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவருடைய படைப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த படம் விடுதலை. இந்த படத்தில் கதாநாயகனாக சூரி நடித்திருந்தார். விஜய் சேதுபதியும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர்களுடன் இந்த படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருக்கிறார். படத்தில் மலைப்பகுதியில் மக்கள் வாழும் இடத்தில் கனிம வளங்கள் நிறைய கிடைக்கிறது. இந்த கனிம வளங்களை எடுத்துக் கொள்ள தனியார் நிறுவனத்திற்கு அரசாங்கம் அனுமதி தருகிறது. இதனால் இந்த கனிம வளங்களை எடுக்கக்கூடாது என்று மக்கள் எதிர்த்து போராடுகின்றனர்.

- Advertisement -

இந்த போராட்டத்தின் தலைவனாக விஜய் சேதுபதி இருக்கிறார். வழக்கம்போல் மக்கள் போராட ஆரம்பித்தால் அவர்களை அடக்கி ஒடுக்க வன்முறையை போலீஸ் கையில் எடுக்கிறது. இரக்கமில்லாமல் போலீஸ் நடந்து கொள்கிறார்கள். சூரி மக்களுக்கு எப்படியெல்லாம் உதவி செய்கிறார்? மக்களின் இந்த போராட்டம் வெற்றி பெற்றதா? இறுதியில் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதை அடுத்து தற்போது இந்த படத்தினுடைய இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. இந்த படம் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கிறது.

53வது ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழா கடந்த ஜனவரி 25ஆம் தேதி தொடங்கி இருக்கிறது. இந்த விழா பிப்ரவரி 4ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் பல நாடுகளில் இருந்து வெளியான திரைப்படங்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் தேர்வாகி இருக்கிறது. அந்த வகையில் பிக் ஸ்கிரீன் போட்டி பிரிவில் ராம் இயக்கியுள்ள ஏழு கடல் ஏழு மலை என்ற படம் தேர்வாகி இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படம் இன்னும் வெளிவரவில்லை. முதல் முறையாக இந்த படம் கடந்த ஜனவரி 30 ஆம் தேதி தான் திரையிடப்பட்டது. இதனை அடுத்து இந்த விழாவில் லைம்லைட் பிரிவில் கடந்த ஆண்டு இறுதியில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் தேர்வாகி இருக்கிறது. அதோடு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை பாகம் ஒன்று படமும் தேர்வாகி இருக்கிறது. இதில் விடுதலை இரண்டாம் பாகமும் பிரீமியர் செய்யப்பட தேர்வு ஆகி இருக்கிறது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு விடுதலைப் பாகம் 1 படம் திரையிடப்பட்டது. படம் முடிந்தவுடன் திரையரங்கில் இருந்த அனைவருமே எழுந்து நின்று ஐந்து நிமிடம் கைதட்டி பாராட்டி இருக்கிறார்கள். இந்த விடியோவை இந்தப் படத்தை தமிழகத்தில் வெளியிட்ட ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தன்னுடைய சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறது. இதை பார்த்து பலருமே வெற்றிமாறனை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தும்வந்தனர்.

Advertisement