செல்லமாவிற்காக செவந்தியை கர்ப்பமாக்கிவிட்டு கைவிட்ட சீரியல் நடிகர் – கர்ப்பிணி நடிகை கண்ணீருடன் புலம்பல்.

0
1665
Arnav
- Advertisement -

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியல் நடிகர் ஆர்னவ்வும் மற்றும் செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாவும் சமீபத்தில் ரகசிய திருமணம் செய்து இருந்தனர். திவ்யாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி 5 வயதில் மகள் இருக்கிறார். அவருடைய மகள் பெயர் ஜெய்சனா. ஏற்கனவே திவ்யா தன் மகளின் புகைப்படத்தை பதிவிட்டு எனது இளவரசி என்று கூறி இருந்தார். ஆனால், இவருடைய முதல் திருமணத்தில் என்ன பிரச்சனை? எப்படி விவாகரத்தானது? யார் என்று விவரம் எதுவும் தெரியவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் கர்ப்பமாக இருப்பதை திவ்யா அறிவித்து இருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் அர்னவ் தன்னை ஏமாற்றிவிட்டதாக திவ்யா பகீர் குற்றச்சாட்டை எழுப்பி இருக்கிறார். திவ்யாவை விரட்டி விரட்டி காதலித்து இருக்கிறார் அர்னவ். இஸ்லாம் மதத்தை சேர்ந்த அர்னவ், திவ்யாவை மதம் மாறினால் தான் திருமணம் செய்துகொள்வதாக கூறி இருக்கிறார். இதனால் திவ்யாவும் மதம் மாறி இருக்கிறார். இதைத் தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் ரகசிய திருமணம் நடைபெற்று ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இப்படி ஒரு நிலையில் அருணாவிற்கு வேறு ஒரு சின்னத்திரை நடிகையுடன் தொடர்பு ஏற்பட்டதால்அர்னவ் மீது நம்பிக்கை இழந்த திவ்யா தன்னை ஊரறிய திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டு இருக்கிறார்.

- Advertisement -

போலீசில் புகார் :

இதை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திவ்யாவை ஊரறிய திருமணம் செய்திருந்தார் அர்னவ், திருமணம் முடிந்து சில வாரங்களில் திவ்யா கர்ப்பமாகி இருக்கிறார். சமீபத்தில் தான் இவருக்கு வளைகாப்பு கூட நடைபெற்று இருந்தது. இப்படி ஒரு நிலையில் அர்னவ், திவ்யாவை பிரிந்து சென்றுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் திவ்யா, அர்னவ் தன்னை தள்ளிவிட்டதால் வயிற்றில் அடிபட்டு ரத்தம் வந்ததால் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றதாக கூறி இருக்கிறார்.

செல்லம்மா சீரியல் நடிகையுடன் தொடர்பு :

மேலும், கர்ப்பிணியான அவர் கவனித்துக் கொள்ள கூட ஆளில்லாமல் அனாதையாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருக்கிறார். மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட போது அவரை கருக்கலைப்பு செய்ய சில மருத்துவர்கள் வற்புறுத்தியதாக திவ்யா கூறியிருக்கிறார். மேலும், அர்னவ்விற்கு தான் நிறைய பண உதவி செய்து இருப்பதாகவும் கூறி இருக்கும் திவ்யா, செல்லம்மா தொடரில் கமிட் ஆன போது ஆஷிதா என்பவருடன் அவனுக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும் அந்த பெண்ணுடன் அவன் தொடர்பில் இருக்கிறான்.

-விளம்பரம்-

பயந்து தான் நான் திருமண புகைபடங்களை வெளியிட்டேன் :

அந்த பெண்ணிற்கும் அவனுக்கு கல்யாணம் ஆனது தெரியும். அவன் பெண்ணுடன் பழகுவதை நான் கேட்ட போது அவன் என்னிடம் சண்டையிடான். அதற்கு பயந்து தான் நான் திருமண புகைப்படம், வளைகாப்பு புகைப்படம் எல்லாத்தையும் போட்டேன். அதை நீக்க சொல்லி சண்டையிட்டேன். ஆனால், மற்றவர்களிடம் அது விளம்பர ஷூட்டிங்கின் போது எடுத்து என்று கூறிவிட்டான். மேலும், நான் தமிழ் நாட்டை சேர்ந்தவன் வெளியில் இருந்து வந்துவிட்டு இப்படியெல்லாம் நீ பண்ரயா உன்ன என்ன பன்றேன் பாருனு மிரட்டினான்.

போலீசில் புகார் :

இப்படி ஒரு நிலையில் தான் வீட்டில் இருக்கும் போது என்னை அடித்து காலால் எட்டி உதைத்தான். அப்போது அந்த பொண்ணு கூட போனில் இருந்தது. எனக்கு ரத்தம் வரவே நான் மருத்துவமனையில் சேர்ந்துவிட்டேன் என்று கதறி இருக்கிறார் திவ்யா. மேலும், காவல் துறையில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி தன் உயிருக்கு எதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு காரணம் அர்னவ் தான் என்றும் கூறி புகார் கொடுத்து இருக்கிறார் திவ்யா.

Advertisement