பொங்கலுக்கு பார்ட்டியா? வெங்கட் பிரபு அல்லது சூர்யா வா !

0
1801
- Advertisement -

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூரியா நடித்துள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’ (TSK), விக்னேஷ் சிவனுடன் சூரியா முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளதால் சூரியா ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது இப்படம்.

-விளம்பரம்-

- Advertisement -

சமீபத்தில் வெளியான படத்தின் ‘சொடுக்கு’ பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்துவருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு இசை அமைத்த்வர் அனிருத். இந்த படம் பொங்கலுக்கு வெளிவருகிறது.

மேலும், வெங்கட் பிரபு இயக்கியுள்ள படம் பார்ட்டி. இந்த படமும் பொங்கலுக்கு வெளியிட வெங்கட் பிரபு தயாராகி வருகிறார். இதனால் பொங்கல் பார்ட்டிக்கு வெங்கட் பிரபுவும் தயாரக இருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.

-விளம்பரம்-

முன்னதாக, விமலின் ‘மன்னன் வகையறா’ படம் பொங்கலுக்கு வெளியிடப் போவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இறுதியாக ‘சூரியாவின் தானா சேர்ந்த கூட்டத்துடன்’ பொங்கல் ரேசில் ‘பார்ட்டியும்’ கலந்துகொள்ளும் எனத் தெரிகிறது.

Advertisement