முன்பு கஞ்சா, இப்போ கிட்னி – எப்படி இருக்கிறது சிவகார்த்திகேயனின் டாக்டர் – முழு விமர்சனம் இதோ

0
6498
Doctor
- Advertisement -

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் டாக்டர். இந்த படத்தில் பிரியங்கா, யோகிபாபு,இளவரசன், தீபா, அர்ச்சனா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். படத்திற்கு அனிரூத் இசை அமைத்து உள்ளார். சமீபகாலமாக அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த டாக்டர் படம் திரையுயரங்கில் வெளியாகி உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களின் எதிர்பார்ப்பை டாக்டர் படம் பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை இங்கு பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைகளம்:

- Advertisement -

ராணுவத்தில் மருத்துவராக பணி புரியும் வருண் என்ற கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்து இருக்கிறார். பத்மினி என்ற கதாபாத்திரத்தில் பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் திருமண நிகழ்வில் சந்திக்கிறார்கள். பின் இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெரியவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், பத்மினிக்கு சிவாவை பிடிக்கவில்லை. பின் சிவகார்த்தியன் குடும்பத்தை அழைத்து தனக்கு பிடிக்கவில்லை என்று நேரடியாகவே பத்மினி சொல்லிவிடுகிறார்.

இந்த நேரத்தில் பத்மினியின் அண்ணி குழந்தை காணாமல் போகிறது. பின் சிவா கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்க போராடுகிறார். அதற்காக ராணுவமும் உதவுகிறது. இந்த குழந்தையை சிவா எப்படி கண்டுபிடிக்கிறார்? எதற்காக குழந்தையை கடத்தினார்கள்? கடைசியில் பத்மினிக்கு சிவகார்த்திகேயனை பிடித்துவிட்டதா? என்பதே படத்தின் மீதி கதை. வழக்கமான கான்செப்ட் இருந்தாலும் திரைக்கதையில் புது மாற்றங்களைக் கொண்டு அதிரடி ஆக்ஷனில் காமெடியை புகுத்தி அதிர வைத்துள்ளார் இயக்குனர் நெல்சன்.

-விளம்பரம்-

வழக்கம் போல் சிவகார்த்திகேயன் காமெடி, ஆக்ஷன் என்று தன்னுடைய நடிப்பில் தூள் கிளப்பி உள்ளார். படத்தில் யோகி பாபுவின் நகைச்சுவை வேற லெவல் என்று சொல்லலாம். இந்த படத்தின் மூலம் பிரியங்காவை சுற்றி இளைஞர்களின் கூட்டம் அலைமோதும் என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு இவர் இந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பெண் குழந்தைகள் கடத்தல் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டது தான் டாக்டர்.

படத்தின் முதல் பாதி கொஞ்சம் மெதுவாக செல்கிறது. இரண்டாம் பாதி தான் அதிரடி, ஆக்ஷன் என்று செல்கிறது. படம் முழுவதும் பார்வையாளர்களுக்கு சலிப்பு ஏற்படாமல் கதையை கொண்டு சென்று இருக்கிறார் இயக்குனர். படத்தில் பாடல்கள் ஒவ்வொன்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதிலும் செல்லம்மா பாடல் தூள் கிளப்பியது. இந்த படம் முழுக்க முழுக்க ஒரு கமர்சியல் படமாக அமைந்துள்ளது.

பிளஸ்:

படத்தில் மெதுவான குரலில் பேசுவது, டாக்டர் கூறிய உடல்மொழி, திட்டங்கள், ஆக்ஷன் என அனைத்திலும் சிவகார்த்திகேயன் பட்டையை கிளப்பியுள்ளார்.

நடிகர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் தூள் கிளப்பியுள்ளார்கள். குறிப்பாக நடிப்பு நேர்த்தி.

படத்திற்கு இசையும், ஒளிப்பதிவும் பக்கபலமாக உள்ளது. படத்தின் செகண்ட் ஹீரோ அனிருத் தான்

மைனஸ்:

இன்னும் கொஞ்சம் ஆக்சன் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

முதல் பாதி இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக இருந்திருக்கலாம்.

வழக்கமான படங்களில் கொண்டு வரப்பட்ட கான்செப்டை தான் இதில் வைத்திருக்கிறார்கள்.

நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் படம் என்று சென்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு பரவாயில்லை என்று சொல்லலாம். கொடுத்த காசு வீண் போகவில்லை.

மொத்தத்தில் டாக்டர் – ஒரு சிறிய காமெடி ஆப்பரேஷன் தான்.

Advertisement