ரஞ்சித்தோட இந்த படம் கலெக்ட் பண்ணத விட திரௌபதி பண்ண கலெக்ஷன் அதிகம் – இயக்குனர் மோகன் ஓபன் டால்க்.

0
10769
mohan
- Advertisement -

சமீப காலமாகவே தமிழ் சினிமா உலகில் ஜாதிகளை மையமாக வைத்து பல இயக்குனர்கள் படம் எடுத்து வைக்கிறார்கள். இது சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுப்பினாலும் அதில் சில படங்கள் வெற்றியையும் பெற்று வருகின்றன. வெற்றிமாறன், மாரிசெல்வராஜ், ரஞ்சித் போன்ற பல இயக்குனர்கள் ஜாதியை மையமாக வைத்து படங்களை இயக்கி இருந்தார்கள், இந்த படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தினாலும் வசூலிலும், மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. இதனைத் தொடர்ந்து இந்த இயக்குனர்களுக்கு சினிமா உலகில் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் இதே போல் ஜாதியை மையமாக வைத்து வெளிவந்த படம் தான் திரௌபதி . இந்த படத்தை மோகன் ஜியால் இயக்கி இருந்தார். இந்த படத்தில் ரிச்சர்ட் ரிஷி, சீலா, கருணாஸ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். ஆனால், இந்த படம் அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை, இந்நிலையில் இதுகுறித்து நடிகர் இயக்குனர் மோகன் அவர்கள் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அதில் அவரிடம் ரஞ்சித் அவர்களும் இரண்டு படங்களை எடுத்து மூன்றாவது படம் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் எடுத்திருந்தார்.

- Advertisement -

நீங்களும் இதே போல் இரண்டு படங்களை கொடுத்து மூன்றாவது படம் ரிச்சர்ட் வைத்து திரௌபதி படம் இயக்கி இருந்தீர்கள். இதை எப்படி நீங்கள் பார்க்கிறீர்கள் என்று கேட்டார். இதற்கு இயக்குனர் மோகன் அவர்கள் கூறியது, இதற்கெல்லாம் மீடியா தான் காரணம். மெட்ராஸ் படமும் அதே ஜாதியை மையமாக வைத்து வந்த படம் தான். திரௌபதி படமும் அதே கதை தான். ஆனால், மீடியாக்கள் மெட்ராஸ் படத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தை திரௌபதி படத்திற்கு கொடுக்கவில்லை. சொல்லப்போனால் கதையிலும், வசூலிலும் திரௌபதி படம் தான் அதிக கலக்ஷன் செய்தது.

இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. ஆனால், அந்த படத்தை மீடியா கொண்டாடவில்லை. அதே ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தை மீடியா உயர்த்திப் பேசிய உடன் ரஜினி வைத்து காலா படம் பண்ண ரஞ்சித்துக்கு வாய்ப்பு கிடைத்தது. இதே திரௌபதி படம் மக்கள் மத்தியில் பிரபலமாக மீடியாக்கள் செய்திருந்தால் எனக்கும் அந்த வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று பகிர்ந்திருந்தார். தற்போது அவர் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement