கருப்பர் கூட்டத்தையும் சேர்ந்து இந்த 4 யூடுயூப் சேனலையும் மூடுங்க- மோகன் போட்ட ட்வீட். கலாய்த்த யூடுயூபர்.

0
2582
karuppar
- Advertisement -

தமிழ் கடவுள் முருக பெருமானை இழிவுபடுத்தும் விதத்தில் ‘கந்த சஷ்டி” பாடலை கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தி வீடியோ வெளியிட்ட ‘கறுப்பர் கூட்டம்’ என்ற யூடுயூப் சேனல் தான் தற்போது சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. கருப்பர் கூட்டம் என்ற யூ-டியூப்  சேனலை விமர்சித்தும்,  அதன் பின்னால் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வந்தனர்.

-விளம்பரம்-

இந்த சர்ச்சைக்கு பல்வேறு பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் பிரசன்னா, நட்டி நாகராஜ், திரௌபதி இயக்குனர் மோகன், ராகவா லாரன்ஸ், வரலக்ஷ்மி சரத்குமார், லட்சுமி ராமகிருஷ்ணன், ராஜ் கிரண் போன்ற பல்வேறு திரை பிரபலங்கள் கூட கறுப்பர் கூட்டத்தின் விடீயோவிற்கு கண்டனம் தெரிவித்தனர்.அதே போல திரௌபதி இயக்குனர் மோகனும் கருத்து தெரிவித்திருந்தார்.

- Advertisement -

அதில், நான் இப்பவும் சொல்றேன்.. இவனுங்கள கைது செய்தோ, வழக்கு தொடுத்தோ திருத்த முடியாது.. மொத்தமா புறக்கணிக்கணும்.. சினிமாவில், இலக்கியத்தில் இவனுங்க வேரை பிடுங்கினால் இவர்கள் ஆட்டம் அடங்கும்.. இல்லனா இப்படி கேட்டுட்டே இருக்க வேண்டியது தான் என்று பதிவிட்டிருந்தார். மற்றொரு பதிவில், இந்த கருப்பர் கூட்டம் போலவே இன்னும் சில இந்து மத எதிர்ப்பு youtube சேனல்கள் இருக்காங்க.

எனக்கு தெரிந்த சில U2brutus கருப்பர் தேசம் Plip Plip Second show இன்னும் பல இது போல உள்ளது.. இவர்களை புறக்கணிக்க தொடங்குங்கள்.. எதிர் கருத்து வையுங்கள்.. கருத்தை கருத்தால் எதிர்க்க வேண்டும் என்று பதிவிட்டிருந்தார். மோகனின் இந்த பதிவிற்கு பதில் லலிதா Second Show யூடுயூப் தரப்பினர், நம்ம சேனல்ல ஒரு வீடியோ போட்டாலே, அதிகபட்சம் 500-2500 subscribers தான் வருவாங்க.

-விளம்பரம்-

மோகன் அண்ணன் போட்ட ஒரே tweet’ல ட்விட்டர்ல புதுசா 500 followers. யூட்யூப்ல ஒரு மணிநேரத்துல புதுசா 1000 followers ஒரு காலத்துல வெறும் 800 subscribers இருந்த சேனலுக்கு, #திரௌபதி ரிவ்யூ மூலமா புதுசா 3000 subscribers குடுத்து ஊக்கப்படுத்துனதும் அண்ணன் தான் பாசக்கார அண்னன். நான் கேட்காமலே, அப்பப்போ வந்து நம்ம சேனலை உன் சேனலா நினைச்சு வளர்த்துவிட்டுட்டு போறியேண்ணே, நல்லா இருண்ணே என்று பதிவிட்டுள்ளனர்.

Advertisement