‘கறுப்பர் கூட்டம்’ சர்ச்சை, ரஞ்சித்தையும் மறைமுகமாக தாக்கி திரௌபதி இயக்குனர் போட்ட ட்வீட்.

0
1866
mohan
- Advertisement -

தமிழ் கடவுள் முருக பெருமானை இழிவுபடுத்தும் விதத்தில் ‘கந்த சஷ்டி” பாடலை கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தி வீடியோ வெளியிட்ட ‘கறுப்பர் கூட்டம்’ என்ற யூடுயூப் சேனல் தான் தற்போது சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. கருப்பர் கூட்டம் என்ற யூ-டியூப்  சேனலை விமர்சித்தும்,  அதன் பின்னால் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர். மேலும், கருப்பர் கூட்டம் யூடுயூப் சேனலை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

அதே போல இந்த சர்ச்சைக்கு பல்வேறு பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் திரௌபதி பட புகழ் இயக்குனர் மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்ட ஒரு பதிவில், இந்து மதத்தை எவ்வளவு கீழ்தரமாக இழிவு செய்தாலும் கைது வரை கொண்டு செல்ல ஒரு அமைப்போ, கட்சியோ இங்கு இல்லை ஆனால் மற்ற மதத்தை பற்றி ஒரு வார்த்தை பேசினால் கூட அழுத்தம் கொடுத்து கைது செய்ய முடியும். இப்போது இன்னும் முன்னேறி முன்னெச்சரிக்கையாக கூட கைது செய்ய முடியும். வாழ்க தமிழ்நாடு என்று பதிவிட்டு இருந்தார்.

இதையும் பாருங்க : நேத்தெல்லாம் தூங்கள, போன் பண்ணி பச்ச பச்சயா திட்றாங்க, கேளுங்க இத – தேம்பி அழுத நாஞ்சில் விஜயன்.

- Advertisement -

மேலும், மற்றொரு பதிவில் இந்த கருப்பர் கூட்டத்தை பற்றி புகார் கொடுத்தோ, கைது செய்தோ எதுவும் மாறிட போறது இல்ல. திரைத்துறையை இவர்களிடம் இருந்து மீட்டு எடுக்கனும். திரைத்துறையில் இவர்களின் நுன்னிய கடவுள் எதிர்ப்பு, குறிப்பிட்ட சாதி மத எதிர்ப்பு அரசியலை புரிந்து மக்கள் புறக்கணிக்க வேண்டும். இதுதான் முக்கியம் என்று பதிவிட்டுள்ளார் மோகன்.

மோகன் பதிவிட்டுள்ள டீவீட்டில் ‘திரைத்துறையை இவர்களிடம் இருந்து மீட்டு எடுக்கனும்’ இந்த ஒரு வரி இயக்குனர் ரஞ்சித்தை தாக்கி தான் இருக்கிறது என்று நெட்டிசன்கள் கமன்ட் செய்து வருகின்றனர். அதிலும் ஒரு ரசிகர் ‘சார் சில உச்ச நடிகர்களே இவர்களின் காலடியில் கிடக்கின்றனர்… என்ன காரணம் என்று பார்த்தால் நடிகர்களின் அந்த weaknessயை இவர்கள் நன்றாக பயன்படுத்தி கொள்கிறார்கள்…அதனால் தான் ஓயாம ட்வீட் கருத்து சொல்லும் சில நடிகர்கள் இந்த விஷயத்தில் ஊமையாக செயல்படுகின்றனர்’ என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement