நீண்ட நாள்கள் எதிர்பார்த்து இருந்த வலிமை படம் ரிலீசாகி இருக்கிறது. நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார். இதையும் போனிகபூரே தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து உள்ளார் மற்றும் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், படத்தில் அஜித் அவர்கள் அசிஸ்டன்ட் கமிஷனராக நடித்திருக்கிறார். சென்னையில் Satan Slave குழுவை சேர்ந்த இளைஞர்கள் பைக்கை வைத்து பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றார்கள்.
இதை அஜித் கண்டுபிடித்து அந்த கூட்டத்தின் தலைவரை பிடிக்கிறார். இந்த குழுவில் அஜித்தின் தம்பியும் இருப்பது தெரிகிறது. இதையெல்லாம் அஜித் எப்படி சமாளித்து வருகிறார்? என்பது தான் படத்தன் கதை. படம் முழுவதும் அஜித்தின் ஒவ்வொரு காட்சிகளும் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது. அதோடு வில்லன் கதாபாத்திரத்தில் கார்த்திகேயா மிரட்டியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஆண்களுக்கு இணையாக ஆக்சன் காட்சிகளில் ஹூமா குரேஷி மாஸ் காட்டியிருக்கிறார்.
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத வலிமை படம் :
அதிலும் படத்தில் பஸ் பைட் தமிழ் சினிமாவிலேயே ஒரு மைல்கல் காட்சி என்று சொல்லுமளவிற்கு இயக்குனர் மிரட்டி இருக்கிறார். மேலும், வலிமை படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இருந்தாலும் சிலர் எதிர்மறையான கருத்துக்களை பதிவிட்டு தான் வருகிறார்கள். வலிமை படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக சென்றாலும் இரண்டாம் பாதி ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றம் என்று சிலர் கூறுகிறார்கள்.
அதே போல பல்வேரு விமர்சகர்களும் இந்த படத்திற்கு சுமாரான விமர்சனத்தை தான் கொடுத்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த படம் குறித்து அஜித் ரசிகரும், இயக்குனருமான மோகன் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், வலிமை அப்டேட் முடிந்துவிட்டது. அடுத்த படத்தில் அஜீத் சார் ஹீரோ மற்றும் வில்லனாக நடித்து நம்மை முழுவதும் திருப்தி படுத்துவார் என்று நம்புகிறேன். அடுத்த அப்டேட்டிர்க்காக காத்துக்கொண்டிருக்கிறேன். ஒரு மனிதனுக்கு எப்படிபட்ட ஒரு விசுவாசமான ரசிகர்கள். அஜித் எதை செய்தாலும் கொண்டாடும் ரசிகர்களுக்கு என் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் சர்ச்சையான இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் மோகன். பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி மோகன் நடிகை ஷாலினியின் தம்பியும் அஜித்தின் மச்சானுமான ரிச்சர்ட் நாயகனாக வைத்து திரௌபதி படத்தை இயக்கி இருந்தார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ரிச்சர்ட்டை வைத்து ‘ருத்ர தாண்டவம்’ படத்தை இயக்கி இருக்கி இருந்தார்.
இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளானது. அஜித் எப்படி சிறுத்தை சிவாவை வைத்து எப்படி தொடர்ந்து படம் நடித்தாரோ அதே போல அஜித்தின் மச்சான் ரிச்சர்டை வைத்து தொடர்ந்து 3 படத்தை இயக்கினர் மோகன். ருத்ர தாண்டவம் படத்தை தொடர்ந்து தற்போது செல்வராகவனை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியானது.