கிரேட் காலிக்கு பிறகு WWE-ல் ஒரு இந்தியர், நட்சத்திர வீரர்களை புரட்டி எடுக்கும் இந்த வீர் மகான் யார் ?

0
649
veer
- Advertisement -

WWE என்றவுடனே பலருக்கும் நினைவில் வரும் பெயர் அண்டர் டேக்கர் தான். அவரைத் தொடர்ந்து தி ராக், ஜான் சேனா, ரோமன் ரெய்ன், பிராக் லசனர் என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். இவர்கள் எல்லாம் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கிறார்கள். அதோடு இந்த WWE போட்டியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து மொழி மக்களும் விரும்பி பார்க்கிறார்கள். இந்த போட்டியை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இந்த பட்டியலில் இடம் பிடித்த முதல் இந்திய வீரர் தி கிரேட் காளி.

-விளம்பரம்-

இவர் 7 அடி உயரம் கொண்டவர். ஒரே அடியில் அண்டர்டேக்கரை கீழே வீழ்த்தும் அளவுக்கு பலம் உடையவர். இந்நிலையில் இவரை தொடர்ந்து இந்த போட்டியில் அடியெடுத்து வைத்திருக்கும் மற்றொரு இந்திய வீரர் தான் வீர் மகான். இவர் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். ஒரு லாரி ஓட்டுநரின் தான் வீர் மகான். இவருடன் பிறந்தவர்கள் மொத்தம் 8 பேர். மேலும், வீர் மகானின் இயற்பெயர் ரிங்கு சிங். இவருக்கு சிறு வயதில் இருந்தே ஈட்டி எறிதல் விளையாட்டில் அதிக ஆர்வம்.

- Advertisement -

ரிங்கு சிங் பற்றிய தகவல்:

ஆகவே, இவர் தன்னுடைய பள்ளிப் பருவத்தில் ஈட்டி எறிதலில் பங்குபெற்று தேசிய அளவிலான ஜூனியர் பிரிவு போட்டிகளில் கலந்து கொண்டு ஏராளமான பதக்கங்களை வென்றிருக்கிறார். மேலும், அந்த ஈட்டி எறிதல் அனுபவத்தோடு 2008இல் தி மில்லியன் டாலர் ஆர்ம் என்ற டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார் ரிங்கு சிங். இந்த நிகழ்ச்சி பேஸ்பால் விளையாடும் திறமையான வீரர்களை கண்டறிவதற்காக நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ரிங்கு சிங்க்கு பேஸ்பால் விளையாடும் அனுபவமே இல்லை.

ரிங்கு சிங்கின் விளையாட்டு:

இருந்தாலும் ஈட்டி எறிதலில் இருந்த அனுபவத்தோடு அதிவேகத்தில் பேஸ்பால் வீசி முதலிடத்தை பிடித்து இருந்தார் ரிங்கு சிங். இதற்குப் பிறகு தான் ரிங்கு சிங்க்கு பேஸ்பால் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. இதனால் இவர் அமெரிக்காவுக்கு சென்று இருந்தார். பின் இவர் பீட்டர்ஸ்பர்க் பைரேட்ஸ் என்ற அமெரிக்க பேஸ்பால் அணியில் முதல் இந்திய வீரராக இணைந்து பயிற்சி எடுத்தார். அதற்கு பிறகு 2009 முதல் 2016 ஆம் ஆண்டு வரை நடந்த பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று பல பதக்கங்களை ரிங்கு வென்றிருக்கிறார்.

-விளம்பரம்-

ரிங்கு சிங்கின் WWE :

அதுமட்டுமில்லாமல் ரிங்கு சிங்கின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவானது தான் Million Dollar Arm படம். அதற்கு பிறகு தான் இவர் வேர்ல்ட் ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட் எனப்படும் WWE அதிக கவனம் செலுத்த தொடங்கினார். மேலும், 2018ல் தி இண்டஸ் ஷேர் என்ற அணியுடன் ரிங்கு சிங், இந்திய வீரர் சௌரவ் குஜ்ஜரு இணைந்து ஒப்பந்தம் செய்து கொண்டு இருந்தார்கள். பின் WWE NXT போட்டிகளில் பங்கேற்று 12 முறை வெற்றி பெற்றிருக்கிறார் ரிங்கு. அதுமட்டும் இல்லாமல் ரிங்கு 2021 ஆம் ஆண்டு WWE ராவுடன் ஒப்பந்தம் செய்து இருந்தார்.

வீர் மகான் பெயர் வந்த காரணம்:

அதன் பின் நீண்ட தலை முடி, கருமையான கண்கள், நெற்றியில் பட்டை என்ற கெட்டப்பில் ரிங்கு சிங் அவர்கள் வீர் மகான் என்ற பெயரில் களம் இறங்கி இருந்தார். வீர் மகானின் மார்பில் இந்தியில் அம்மா என்ற வார்த்தை எழுதப்பட்டிருக்கிறது. மேலும், இவர் பங்கு பெற்ற முதல் போட்டியிலேயே பறந்து பறந்து தாக்கும் ரே மிஸ்டீரியோவை பந்தாடி பலரையும் வியப்படைய வைத்திருந்தார். இப்போது அவர் பிராக் லசனர், ரோமன் ரெய்ன் ஆகியோருக்கு சவால் விட்டிருக்கிறார். மேலும், இன்றைய WWE ரசிகர்களின் மத்தியில் இவரைப் பற்றிய பேச்சுத் தான் அதிகமாக சென்றுகொண்டிருக்கின்றது.

Advertisement