கர்ணன் படத்த சமீபத்தில் தான் பார்த்தேன், அந்த படம் – திரௌபதி பட நடிகை ஓபன் பேட்டி. வீடியோ இதோ.

0
7140
karnan
- Advertisement -

பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி மோகன் இயக்கத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியான திரௌபதி திரைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த படத்தில் ஹீரோவாக பிரபல நடிகை பேபி ஷாலினியின் அண்ணனும், அஜித்தின் மைத்துனருமான ரீச்சர்ட் நடித்து இருந்தார். இந்த படம் சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் வகையில் உருவாகி இருந்தது.ஆனால், இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவாக காண்பித்து விட்டார் மோகன் என்று ஒரு சர்ச்சையும் வெடித்தது.

-விளம்பரம்-

இந்த படத்தில் திரௌபதி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஷீலா ஏற்கனவே ‘டூ லேட்’ என்ற படத்தில் நடித்துள்ளார். அதே போல கடந்த சில நாட்களுக்கு முன்னர் டிவியில் நேரடியாக ரிலீஸ் ஆன யோகி பாபு நடித்த ‘மாண்டேலே’ படத்திலும் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அதே போல இந்த படத்தில் ஒரு பெண் தபால்காரர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஷீலா. இந்த படத்தில் யோகி பாபுவை தொடர்ந்து இவரது நடிப்பு பெரிதும் பாரட்டப்பட்டது.

இதையும் பாருங்க : எப்போவ், கர்ணா – ஊர் மக்களாக நடித்தவர்களுக்கு கூட உயிரை கொடுத்து சொல்லி கொடுத்துள்ள மாரி செல்வராஜ். வீடியோ இதோ.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஷீலா பேசுகையில், ஒரே மாதிரியான கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதை விட வித்தியாசமான கதாபாத்திரத்தை சேர்ந்து நடிப்பது எனக்கு பிடிக்கும். அது மாதிரிதான் ஒரு நடிகையாக திரௌபதி படத்தின் கதையை கேட்டபோது எனக்கு பிடித்துப்போனது. கருத்து ரீதியாக அந்த படத்தை பற்றி நான் எதையும் பேச விரும்பவில்லை. படத்தை நடித்து கொடுப்பது நடிகர்கள் கையில் இருந்தாலும் அந்த படம் எப்படி போய் சேருகிறது என்பது இயக்குனரை சார்ந்தது. திரௌபதி படத்தின் கரு எனக்கு பிடித்ததால் தான் நான் நடித்தேன்.

10 பேர் என்னை தப்பாக கூட நினைத்து இருக்கலாம். இப்போது மண்டேலா படத்தில் நடித்திருக்கிறேன். இப்போ அந்த படத்தை பார்த்து விட்டு அதே பத்து பேருக்கு என் மீது நல்ல அபிப்ராயம் வரலாம் என்று கூறியுள்ளார் ஷீலா. அதே போல் கர்ணன் படம் பற்றி கேள்வி கேட்ட போது ‘கர்ணன் படத்தை சமீபத்தில் தான் பார்த்தேன். அது என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படமாக இருந்தது. பிரச்சனைகளை பற்றி மிகவும் தெளிவாக கூறி இருக்கிறார்கள். வலியும், வேதனையையும் படத்தில் தெளிவாக காண்பித்து இருக்கிறார்கள்’ என்று கூறியுள்ளார் ஷீலா.

-விளம்பரம்-
Advertisement