தமிழில் கார்த்தி நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘அலெக்ஸ் பாண்டியன் ‘ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானவர் பாலிவுட் நடிகர் மிலந்த் சோமன். அலேக்ஸ் பாண்டியன் படத்திற்கு பின்னர் லெக்ஸ் பாண்டியன், வித்தகன், பையா, பச்சைக்கிளி முத்துச்சரம் ஆகிய படங்களில் வில்லனாக நடித்துள்ளார். தமிழில் பரிட்சயமான நடிகர் இல்லை என்றாலும் ஹிந்தியில் இவர் பிரபலமான நடிகராக திகழ்ந்து வருகிறார்.நடிகர் மிலந்த் சோமனுக்கு தற்போது 54 வயது ஆகிறது.
இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு 2006-ல் பிரெஞ்சு நடிகையை மணந்து பின்னர் விவாகரத்து செய்து விட்டார். அதன் பின்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு அங்கிதா கொன்வர் என்ற 26 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அப்போது இவருக்கு வயது 52. இவர் திருமணம் செய்துகொண்ட போது மகள் வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டார் என்று விமர்சனங்கள் கூட எழுந்தன.
இதையும் பாருங்க : இளைய மகன் குக்குவின் பிறந்தநாள், மூத்த மகள் ஷிவானி எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட வெங்கட் பிரபு.
இப்படி ஒரு நிலையில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார் அங்கிதா, அப்போது ரசிகர் ஒருவர் வயதில் மூத்தவரை திருமணம் செய்துகொள்ள கூடாது என்ற இந்திய எண்ணத்தை எப்படி கையாளுகிறீர்கள் என்று கேட்ருந்தார். அதற்கு பதில் அளித்த அங்கீதா,ஒரு சமூகத்தில் எதுவும் பொதுவானதல்ல, மக்கள் பொதுவாக இதைப் பற்றி பேச விரும்புகிறார்கள். அது இந்தியாவுக்கு மட்டுமல்ல.அறியப்படாத, ஆராயப்படாத ஒன்றை நாம் வித்தியாசமாகப் பார்க்கிறோம்.
சில சமயங்களில் அதில் இருக்கும் நல்லது கேட்டதை ஆகியவற்றை வேறுபடுத்திப் பார்க்கும் அளவுக்கு நாம் விழிப்புடன் இல்லை. எனக்கு மகிழ்ச்சியைத் தருவதை நான் எப்போதும் செய்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். ஏற்கனவே பேட்டி ஒன்றில் பங்கேற்ற அங்கிதா, ஒரு நிகழ்ச்சியின்போது தன்னுடைய நண்பர்கள் அவருடன் நடனமாட சொல்லி வற்புறுத்தினார்கள். எங்களை நடனமாட சொல்லி பல மணி நேரம் பார்த்தார்கள். அப்போது நான் தான் உனக்கான நபர் என்று என்னை சம்மதிக்க வைத்தார்.
ஆனாலும் அவர் மீது காதலில் விழ நான் நேரம் எடுத்துக்கொண்டேன். அதேபோல அவர் என்னிடம் காதலை சொன்னபோது அப்போதுதான் என்னுடைய காதலன் இறந்து சில காலம் ஆனது அதிலிருந்து மீள முடியாமல் இருக்கிறேன் என்று கூறியிருந்தேன். அதற்கு அவரோ நான் உன்னை காதலித்தால் உன்னை முழுவதுமாக காதலிக்கிறேன் என்று தான் அர்த்தம். உன்னுடைய கடந்தகால சுமைகளையும் சேர்த்துத்தான். அதனால் பயப்பட வேண்டாம், நாம் இருவரும் ஒன்றாக இருப்போம்’ என்று கூறிய பின்னர் தான் இவர் தான் எனக்கான மனிதர் என்று நான் உணர்ந்து கொண்டேன் என்று கூறியிருந்தார்.