மாட்டு கறி சாப்பிடுவது குறித்து கேள்வி – கடுப்பாகி ரஞ்சித் பட நடிகை சொன்ன பதில்

0
3751
- Advertisement -

பா.ரஞ்சித் படங்களில் வரும் பெண் கதாப்பாத்திரங்கள் எப்போதும் தைரியசாலியாகவும், எதையும் துணிந்து, தனித்து செய்யும் வல்லமை படைத்தவர்களாகவே இருப்பார்கள். அப்படி நட்சத்திரம் சரப்பட்டா பரம்பரை, நகர்கிறது போன்ற படங்களில் ஒரு துணிச்சல் மிக்க பெண்ணாக ரெனே என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கிறார் துஷாரா விஜயன். இதற்கு முன்பு சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவராலும் பாராட்டப்பட்ட துஷாரா அதைவிட கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த கதாப்பாத்திரத்தை இந்த படத்தில் ஏற்று தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் .

-விளம்பரம்-

மேலும், நட்சத்திரம் நகர்கிறது படத்தில் புத்தர் சிலை, மாட்டுக்கறி, சாதி அரசியல், காட்டுப்பூனை, நாட்டுப்பூனை என பா ரஞ்சித்தின் அரசியலும் அதற்கான வசனங்களும் கவனத்தை ஈர்த்தது. இந்த படத்தின் போது துஷாரா விஜயன் பேட்டி ஒன்றை அளித்து இருந்தார். அப்போது பேசிய அவர் ‘இந்த அளவிற்கு என்னை மக்கள் மத்தியில் பிரபலமாகியதற்கு ரஞ்சித் சாருக்கு தான் நன்றி சொல்லணும்.

- Advertisement -

நட்சத்திரம் நகர்கிறது ரெனே :

படத்தில் பீப் கறி பத்தி பேசியிருப்பது பொதுவான விஷயம்தான். அதுவும் ஒரு வகை உணவு தானே. சிக்கன் மாதிரி அதுவும் ஒரு வகையான உணவு. நான் எல்லாம் சாப்பிடுவேன். தயிர் சாதம் பிடிப்பவர்கள் தயிர் சாதம் சாப்பிடலாம். பீப் சாப்பிடுபவர்கள் பீப் சாப்பிடலாம் என்று தான் படத்தில் பேசப்பட்டிருக்கிறது. அதில் ஒன்றும் சர்ச்சையாக கூடிய அளவிற்கு எதுவும் இல்லை என்று கூறியிருந்தார். இவரின் இந்த பேச்சு அப்போது விவாதத்திற்கு உள்ளானது.

கழுவேத்தி மூர்க்கன்

இந்த நிலையில் துஷாரா விஜயன் ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் கௌதம ராஜ் இயக்கி இருக்கிறார் .இந்த படத்தில் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனிஸ்காந்த் போன்ற பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். தற்போது இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

துஷாரா அளித்த பேட்டி :

இந்நிலையில் இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை துஷாரா விஜயன் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், நான் படங்களை தேர்வு செய்வதில் கவனமாக இருப்பேன். குறிப்பாக என்னுடைய கதாபாத்திரம் எளிதில் என்னுடன் கனெக்ட் ஆக வேண்டும் நினைப்பேன். அந்த வகையில் கழுவேத்தி மூர்க்கன் படத்தில் கவிதா கதாபாத்திரம் என் மனதிற்கு ரொம்ப நெருக்கமாக இருந்தது. படத்தில் திண்டுக்கல்லில் உள்ள ஒரு வழக்கமான கிராமத்து பெண்.

மாட்டு கறி குறித்து சொன்னது :

நான் அதே பின்னணியில் இருந்து வந்ததால் இந்த கதாபாத்திரம் எனக்கு எளிதாக இருந்தது. இந்த படம் வெளியான பிறகு இந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நினைவில் வைத்திருப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் சமீபத்தில் தான் மாட்டுக்கறி சாப்பிட ஆரம்பித்தேன். நான் மாட்டுக்கறி சாப்பிடுவேன் என்று தெரிவித்ததை வைரல் ஆக்கினார்கள். நான் சிக்கன் சாப்பிட்டேன் என்று சொன்னால் அது சாதாரணமாகவே எடுத்துக்கொள்ளப்படும். மாட்டுக்கறி உண்பதை மட்டும் பெரிய பிரச்சனையாக மாற்றுவது ஏன்? என்று கூறியுள்ளார்.

Advertisement