ஈரமான ரோஜாவே சீரியலில் காவ்யா-பார்த்தி கதையின் புதிய ட்விஸ்ட்- அதிர்ச்சியில் ரசிகர்கள்! வைரலாகும் ப்ரோமோ

0
962
- Advertisement -

ஈரமான ரோஜாவே சீரியலில் பார்த்தி- காவியா கதையில் திடீர் மாற்றம் செய்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதுவும் புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்று தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் 2018 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது.

-விளம்பரம்-

இந்த தொடரில் மலராக பவித்ரா நடித்திருந்தார். வெற்றியாக புதுமுக நடிகர் திரவியம் நடித்திருந்தார். இவர்களுடன் சியாம், சாய் காயத்ரி, பிரேமலதா, பிரவீன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த தொடரை பிரான்சிஸ் கதிரவன், ரிஷி மற்றும் ரவிப்ரியன் ஆகியோர் இயக்கி இருந்தார்கள். மலரின் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளையும் அதை சமாளித்து மலருக்கு உறுதுணையாக இருக்கும் வெற்றியின் கதை தான் ஈரமான ரோஜாவே.

- Advertisement -

ஈரமான ரோஜாவே 2 சீரியல் :

இந்த தொடர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. மேலும், இந்த சீரியல் கடந்த ஆண்டு தான் முடிவுக்கு வந்தது. அதன் வெற்றியை தொடர்ந்து தற்போது வித்தியாசமான கதைக்களத்துடன் இரண்டாம் பாகத்தை ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் திரவியம், சித்தார்த், கேப்ரில்லா, ஸ்வாதி கொண்டே என பல நடிகர்கள் நடிக்கிறர்கள். இந்த தொடரும் ஆரம்பித்த நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

விதி செய்த சதி:

சீரியலில் பார்த்தி, ஜீவா இருவரும் அண்ணன், தம்பி. அதேபோல் பிரியா, காவ்யா இருவரும் அக்கா, தங்கை. இதில் காவ்யா-ஜீவா இருவரும் காதலிக்கிறார்கள். ஆனால், விதி செய்த சதியால் பார்த்தி- காவியாவையும், ஜீவா-ப்ரியாவையும் திருமணம் செய்து கொள்கிறார்கள். மேலும், இந்த தொடரில் புதிதாக என்ட்ரி கொடுத்துள்ள காவியா மற்றும் பிரியாவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது சீரியலில் ஜோடி மாறி திருமணம் ஆன பிறகு பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

சீரியலின் கதை:

விபத்து போல நடந்து முடிந்த கல்யாணத்தில் பிரியாவும், ஜீவாவும் நெருக்கமாக பழக தொடங்கி விட்டார்கள். ஆனால், பார்த்தி- காவியா விஷயத்தில் மட்டும் பிரச்சனைகள் முற்றிக் கொண்டே செல்கிறது. காவியா ஏற்கனவே ஒரு நபரை காதலித்த விவகாரம் காவியாவின் மாமியாருக்கு தெரியவருகிறது. இதைப் பற்றி காவியாவிடம் பேசுகிறார். ஆனால், தன்னுடைய மகன் ஜீவா தான் அந்த காதலன் என்பது அவருக்குத் தெரியாது. இப்படி இருக்கும் போது காவியா- பார்த்திபனின் வாழ்க்கையை சரி செய்ய இருவரும் பிரிந்து விடுங்கள் என்று கூறிவிடுகிறார்.

சீரியலின் ட்விஸ்ட்:

ஆனால், இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக பார்த்தியும், காவியாவும் நெருக்கமாகி வருகிறார்கள். இந்த நிலையில் மாமியாரின் இந்த முடிவு காவியாவிற்கு அதிர்ச்சியை அளிக்கிறது. இதனால் இருவரையும் அதிகம் பேச விடாமல், பழக விடாமல் காவியாவின் மாமியார் பார்த்துக்கொள்கிறார். இந்நிலையில் இதுகுறித்த ப்ரோமோ தான் தற்போது வெளியாகியுள்ளது. காவியா – பார்த்தி இணைவார்கள் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய ட்விஸ்ட் என்றே சொல்லலாம்.

Advertisement