ஈரமான ரோஜாவேல வர கேபிய தெரியும், பிரியாவ பத்தி உங்களுக்கு தெரியுமா ?

0
2045
Eeramana
- Advertisement -

ஈரமான ரோஜாவே 2 சீரியலில் நடிக்கும் பிரியா குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. வெற்றிவிஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதுவும் புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்று தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் 2018 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது.

-விளம்பரம்-

இந்த தொடரில் மலராக பவித்ரா நடித்திருந்தார். வெற்றியாக புதுமுக நடிகர் திரவியம் நடித்திருந்தார். இவர்களுடன் சியாம், சாய் காயத்ரி, பிரேமலதா, பிரவீன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மலரின் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளையும் அதை சமாளித்து மலருக்கு உறுதுணையாக இருக்கும் வெற்றியின் கதை தான் ஈரமான ரோஜாவே. இந்த தொடர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

- Advertisement -

ஈரமான ரோஜாவே 2 சீரியல்:

இந்த சீரியல் கடந்த ஆண்டு தான் முடிவுக்கு வந்தது. அதன் வெற்றியை தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்துடன் ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகத்தை ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் திரவியம், சித்தார்த், கேப்ரில்லா, ஸ்வாதி கொண்டே என பல நடிகர்கள் நடிக்கிறர்கள். இந்த தொடர் ஆரம்பித்த நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. சீரியலில் பார்த்தி, ஜீவா இருவரும் அண்ணன், தம்பி.

சீரியலின் கதை:

அதேபோல் பிரியா, காவ்யா இருவரும் அக்கா, தங்கை. இதில் காவ்யா-ஜீவா இருவரும் காதலித்து இருந்தார்கள். ஆனால், விதி செய்த வலியால் பார்த்தி- காவியாவையும், ஜீவா-ப்ரியாவையும் திருமணம் செய்து கொள்கிறார்கள். சீரியலில் ஜோடி மாறி திருமணம் ஆன பிறகு பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றது. விபத்து போல நடந்து முடிந்த கல்யாணத்தில் பிரியாவும், ஜீவாவும் நெருக்கமாக பழக தொடங்கி விட்டார்கள். ஆனால், பார்த்தி- காவியா விஷயத்தில் மட்டும் பிரச்சனைகள் முற்றிக் கொண்டே விஷயத்தில்

-விளம்பரம்-

சீரியலில் நடக்கும் திருப்பங்கள்:

தற்போது சீரியலில் பார்த்தியின் வீட்டிற்கு விருந்தாளிகள் வருவதால் பார்த்தியின் அப்பா அவருடைய தங்கையிடம் சமையலை தடபுடலாக செய் என்று சொல்கிறார். ஆனால், அவருடைய தங்கை சமையல் செய்யாமல் சென்று விடுகிறார். இதை அறிந்த காவியம் தன்னுடைய மாமனார் பெயர் கெட்டுவிடக் கூடாது என்று நினைத்து சமைத்து வைக்கிறார். இதை அறிந்த குடும்பத்தினர் சந்தோஷப்படுகிறார்கள். பார்த்தியும் சந்தோஷப்படுகிறார். காவியாவும் பார்த்தியும் கொஞ்சம் கொஞ்சமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிறார்கள். இருவரும் இணைவார்களா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

பிரியா சுவாதியின் பூர்விகம்:

மேலும், இந்த தொடரில் புதிதாக என்ட்ரி கொடுத்துள்ள காவியா மற்றும் பிரியாவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் சீரியலில் பிரியா கதாபாத்திரத்தில் நடிக்கும் சுவாதி குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, இந்த சீரியலின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சுவாதி. இவர் கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்டவர். கன்னட மொழி படத்தின் மூலம்தான் இவர் சினிமா துறைக்குள் நுழைந்திருந்தார். இதுவரை கிட்டத்தட்ட இவர் நான் கன்னட படத்தில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் கன்னட சீரியலிலும் நடித்து இருக்கிறார்.

சுவாதி குறித்த தகவல்:

தமிழில் ஈரமான ரோஜாவே 2 என்ற தொடரில் ஜீவா- பிரியாவின் ஜோடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அது மட்டுமில்லாமல் பிரியா இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். இவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். மேலும், இவர் நடிப்பதை தாண்டி நடனத்தின் மீது அதிக பிரியம் உடையவர். அடிக்கடி தான் செய்யும் ரீல்ஸ் வீடியோக்கள்எல்லாம் பதிவிட்டு வருகிறார். இவருக்கு பெயிண்டிங் மீது தீராத காதல் உடையவர். ஷூட்டிங் இல்லாத நேரத்தில் மனதிற்கு பிடித்தவற்றை பெயிண்டிங் செய்து கொண்டிருக்கிறார். இவருக்கு எல்லா மொழி படங்களிலும் நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை என்றும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

Advertisement