Unfair Eviction – ஜோடி ஆர் யூ ரெடி இந்த வார எலிமினேஷனை கண்டு ரசிகர்கள் அதிருப்தி.

0
914
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இதனால் புதுப்புது வித்தியாசமான கான்செப்டில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். குறிப்பாக, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் மற்றும் பாடல் நிகழ்ச்சிகள் எல்லாம் உலகம் முழுவதும் பிரபலமாகி இருக்கிறது. அந்த வகையில் தற்போது புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் நடன நிகழ்ச்சி தான் ஜோடி ஆர் யூ ரெடி.

-விளம்பரம்-

இதற்கு முன்பு டான்ஸ் ஜோடி, ஜோடி நம்பர் 1 என பல நடன நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டிருந்தது. தற்போது விஜய் டிவியில் ஜோடி ஆர் யூ ரெடி என்ற நிகழ்ச்சி புதிதாக தொடங்கப்பட்டிருக்கிறது. இது ஜோடி நம்பர் 1ன் 11வது பகுதி என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை ரியோ ராஜ் மற்றும் ஏஞ்சலின் தொகுத்து வழங்குகிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக நடிகை மீனா, ஸ்ரீதேவி விஜயகுமார், நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் பங்கேற்று இருக்கிறார்கள்.

- Advertisement -

ஜோடி ஆர் யூ ரெடி:

கடந்த ஜனவரி மாதம் தான் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியை disney+ hotstarலிலும் ஒளிபரப்பி வருகிறார்கள். ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் 20 திறமையான நடன கலைஞர்களுடன் துவங்கப்பட்டது. இந்த நடன கலைஞர்களுடன் தொலைக்காட்சி பிரபலங்கள் ஜோடியாக போட்டு நடனம் ஆடுகிறார்கள்.

சிறந்த ஜோடிகள்:

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு கான்செப்டில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணா- சில்பா, வினித்- ரம்யா கோல், ரவீனா- விக்னேஷ், தர்ஷிகா- பிரியதர்ஷன் ஆகியோர் சிறந்த ஜோடிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இந்த வாரம் எலிமினேட் சுற்று நடைபெற்று இருக்கிறது. அதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுபம்- ரேஷ்மா முரளிதரன் எலிமினேட் ஆகியிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

ரேஷ்மா முரளிதரன் எலிமினேட்:

இவர்கள் நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து நன்றாக தான் நடனம் ஆடி வந்தார்கள். இந்த வாரம் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். ரேஷ்மா வெளியேறியதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. மேலும், ரேஷ்மா வெளியேற்றம் குறித்து நெட்டிசன்கள், இது ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த தீர்ப்பு சரியானது இல்லை என்றெல்லாம் கூறி வருகிறார்கள்.

ரேஷ்மா குறித்த தகவல்:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சீரியல் பூவே பூச்சூடவா. இந்த தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரேஷ்மா. அதன் பின் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்த அபி டெய்லர் என்ற சீரியலில் நடித்து இருந்தார். இந்த சீரியல் கடந்த ஆண்டு முடிந்தது. தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கிழக்கு வாசல் என்ற சீரியலில் நடித்து இருக்கிறார். இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

Advertisement