எதிர் நீச்சல் சீரியல் நடிகர், நடிகைகளின் சம்பள லிஸ்ட் – ஹீரோவை விட இவருக்கு அதிகமாம்

0
3785
- Advertisement -

ஹீரோவை விட எதிர்நீச்சல் சீரியல் வில்லன் மாரிமுத்து அதிக சம்பளம் வாங்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சன் டிவி எதிர்நீச்சல் சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த சீரியல் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் பிரியதர்ஷினி, ஹரிப்ரியா, மதுமிதா, விபு ராமன், மாரிமுத்து, கமலேஷ், சபரி பிரசாந்த் உட்பட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை தான் எதிர்நீச்சல். மேலும், மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார்.

சீரியலின் கதை:

இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, சில மாதங்களாகவே சீரியலில் ஆதிரை- அருண் குறித்த காட்சிகள் தான் ஒளிபரப்பாகி வருகிறது. ஆதிரை- அருண் திருமணத்தை எப்படியாவது நடத்தி வைக்க வேண்டும் என்று வீட்டில் உள்ள பெண்கள் எல்லோரும் திட்டம் போடுகிறார்கள். கடைசியில் கரிகாலனுக்கும் ஆதிரைக்கும் திருமணம் நடந்து விட்டது. இது பலருக்குமே ஷாக்கிங் ஆகத்தான் இருந்தது.

-விளம்பரம்-

சீரியலில் டீவ்ஸ்ட்:

இனி கரிகாலனுடன் சேர்ந்து வாழ்வாரா ஆதிரை?அருணின் நிலைமை என்ன? குணசேகரனின் எண்ணம் நிறைவேறுமா? ஜனனி என்ன செய்து போகிறார்? என்று பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் நடிகர்- நடிகைகள் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சீரியலில் வில்லனாக மிரட்டி வரும் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்கும் மாரிமுத்து அவர்கள் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

நடிகர்-நடிகைகள் சம்பளம் பட்டியல்:

ஹீரோவை விட இவருக்கு தான் இந்த சீரியலில் அதிக சம்பளம். இவரை அடுத்து மதுமிதா, கமலேஷ், ஹரிப்பிரியா ஆகியோர் 15,000 ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள். சக்தி, கனிகா ஆகியோருக்கு ரூ.12 ஆயிரமும், சபரி, பிரியதர்ஷினி ஆகியோருக்கு ரூ.10 ஆயிரமும் சம்பளம் வாங்குகிறார்கள். தற்போது இந்த பட்டியல் வெளியானதை தொடர்ந்து மாரிமுத்துக்கு இன்னும் அதிகமாக கொடுத்தாலும் தவறில்லை. அவர் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமான ஆள்தான் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Advertisement