எதிர்நீச்சல் மதுமிதா வாங்கிய புதிய கார் – விலை மட்டும் எத்தனை லட்சம் தெரியுமா ? குவியும் வாழ்த்துக்கள்.

0
2662
madhumitha
- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதா புது கார் வாங்கி இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்காக இருக்கும் சீரியலில் ஒன்று சன் டிவி எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த சீரியல் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் பிரியதர்ஷினி, ஹரிப்ரியா, மதுமிதா, விபு ராமன், மாரிமுத்து, கமலேஷ், சபரி பிரசாந்த் உட்பட பலர் நடித்து வருகிறார்கள். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை தான் எதிர்நீச்சல். மேலும், மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார்.

சீரியலின் கதை:

இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். மேலும், சீரியலில் கரிகாலனுக்கும் ஆதிரைக்கும் திருமணம் நடந்து விட்டது. இது பலருக்குமே ஷாக்கிங் ஆகத்தான் இருந்தது. வீட்டில் உள்ள பெண்கள் ஒவ்வொருமே தங்கள் பக்கம் நியாயத்தை எதிர்த்து தட்டிக் கேட்கிறார்கள். இதனால் குணசேகரன் என்ன செய்வதென்று புரியாமல் அமைதியாக இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பட்டமாவின் சொத்தை தன் பெயரில் முழுவதுமாக மாற்றும் வரை எந்த பிரச்சினையும் செய்யக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறார்.

-விளம்பரம்-

மதுமிதா குறித்த தகவல்:

குணசேகரின் ஆட்டம் என்ன? வீட்டு பெண்களுக்கு நியாயம் கிடைக்குமா? கரிகாலனுடன் சேர்ந்து வாழ்வாரா ஆதிரை?என்று பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மதுமிதா. இவர் இந்த சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடம் பிடித்திருக்கிறார். இவர் கன்னட சின்னத்திரை சீரியல் நடிகை ஆவார். இவர் ஏற்கனவே கன்னடம், தெலுங்கு சின்னத்திரை சீரியல்களில் நடித்திருக்கிறார். ஆனால், எதிர்நீச்சல் சீரியலின் மூலம் தான் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது.

மதுமிதா புது கார்:

இந்த நிலையில் நடிகை மதுமிதா அவர்கள் புது கார் வாங்கி இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, தற்போது நடிகை மதுமிதா அவர்கள் புது கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். இது தொடர்பான வீடியோ ஒன்று தான் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். பின் அதில், என் கனவு இல்லை நான் நிஜமாகிய முதல் விஷயம் என்று கூறியிருக்கிறார். மேலும், மதுமிதா வாங்கிய புது காரின் பெயர் Kia Sonet. இதனுடைய விலை சுமார் 17 முதல் 18 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement